சீனா: தென் சீன கடல் பகுதியில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் சீன கடலின் வடகிழக்கு பகுதியில் 100 மில்லியன் டன்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதை கண்டறியப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
Huizhou 19-6 oilfield என்ற எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது. கிழக்கு சீனாவின் குவாண்டுவாங் மாகாணத்தில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் இந்த கச்சா எண்ணெய் இருப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சராசரியாக 100 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியில் இவை இருப்பதாக சீனா கூறுகிறது.

சீன நாட்டை சேர்ந்த எண்ணெய் ஆய்வு நிறுவனம் இந்த பகுதியில் சோதனை நடத்திய போது ஒரு நாளைக்கு 413 பேரல்கள் எண்ணெய், 68,000 கியூபிக் மீட்டர்கள் இயற்கை எரிவாயு ஆகியவற்றை வெற்றிகரமாக பிரித்து எடுத்ததாக தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதி என்பது பல்வேறு சர்ச்சைகள் நிறைந்த பகுதி. ஏனெனில் தென் சீன கடல் பகுதியில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சில தீவுக் கூட்டங்களுக்கு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
இருந்தாலும் அந்த இடத்தில் சீனா தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தீவு கூட்டங்களுக்கும் அங்கிருக்கும் இயற்கை வளங்களுக்கும் சீனா ,பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் , இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இவ்வாறு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதன் காரணமாக தென் சீன கடல் பகுதி பகுதியில் இருக்கும் வளங்கள் குறித்து பெருமளவில் எந்த நாடுகளும் ஆய்வு நடத்த முடியவில்லை.
இந்த சூழலில் தான் தென் சீன கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த வளங்களை கண்டுபிடித்து இருக்கக்கூடிய பகுதி சீனாவுக்கு சொந்தமானது என்றும் சர்ச்சைக்குரிய பகுதி இல்லை என்பதும் தெரிய வருகிறது. எண்ணெய் வளம் கண்டுபிடித்திருக்கும் பகுதி சீனாவின் பிரத்தியேக பொருளாதாரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி என்றும் சீன கடற்கரையிலிருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவில் இவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிகபட்சமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடிய ஒரு நாடாக சீனா இருக்கிறது. சீனா ஒரு நாளைக்கு 11.1 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. தற்போது அவர்களிடமே கச்சா எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதால் கூடிய விரைவில் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக சீனா மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications