அமெரிக்க பொருளாதாரத்துடன் போட்டிப்போடும் சீனாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. சீனாவின் ரியல் எஸ்டேட், வங்கி நிதி நிலைமை மோசமானதை தொடர்ந்து ஒவ்வொரு துறையும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு நிற்கிறது. இதனால் சீனா உலக நாடுகளில் செய்யப்படும் முதலீட்டின் வேகத்தையும், அளவையும் பெரிய அளவில் குறைத்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்காவின் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாகவும், சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் வேலைவாய்ப்பு, உற்பத்தி, உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு முன்பு மக்கள கூட்டம் அலைமோதிய தெருக்கள் தற்போது காற்று வாங்கி வருகிறது என சீன மக்கள் புலம்பி வருகின்றனர்.

இதற்கு ஏற்றார் போல் சீனாவின் ஏற்றுமதி அளவுகள் மற்றும் அன்னிய முதலீட்டு அளவுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதை படம் போட்டு காட்டும் அளவுக்கு புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சீனா உலகின் உற்பத்தி இன்ஜின் என்ற நிலையை இழக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
சீனாவின் ஏற்றுமதி அளவுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் ஜூலை 2023ல் 14.5% சரிந்தன, அதே நேரத்தில் இறக்குமதி 12.4% குறைந்துள்ளது என செவ்வாய்க்கிழமை வெளியான சீன கஸ்டம்ஸ் தரவுகள் காட்டுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்தது உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட சரிவை குறிக்கிறது.
பிப்ரவரி 2020 க்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் இருந்து ஏற்றுமதி அளவுகள் மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலவும் மந்தமான டிமாண்ட் முக்கிய காரணமாகும்.
இதன் மூலம் சீனாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மந்தமான வேகத்தில் வளர்ந்துள்ளது. இதை சரி செய்ய கடந்த மாதம் நடந்த சீன அரசின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோ கூட்டத்தில் கொள்கை ஆதரவை உறுதியளிக்கவும் சாதகமானதாகவும் மாற்றவும் நிர்பந்தம் செய்தது.
சீனாவில் புதிய வெளிநாட்டு முதலீடுகள் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவீட்டை ஜூலை காலாண்டில் பதிவாகியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சி ஆகியவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை இந்த முதலீடுகள் காட்டுகிறது.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் சீனாவில் நேரடி அன்னிய முதலீட்டு அளவுகள் வெறும் 4.9 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளன. இது கடந்த ஆண்டின் ஜூலை காலாண்டை ஒப்பிடுகையில் 87 சதவீதம் குறைவானதாகும். 1998 வரையிலான தரவுகளில் இந்த வருடம் ஜூலை காலாண்டில் தான் மிகவும் குறைவான தொகையை அன்னிய முதலீடாக ஈர்த்துள்ளது சீனா.


Click it and Unblock the Notifications