உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது போல் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாகத் தலைமையேற்றார், இதுமட்டும் அல்லாமல் சிசிபி கட்சியின் உயர்மட்ட அதிகாரத்தில் தனது ஆதரவாளர்களை முழுமையாகக் கொண்டு வந்த நிலையில் ஜி ஜின்பிங் இந்த முறை மிகப்பெரிய சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
இவை அனைத்தையும் உடைக்கும் வகையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அளவீடு 30 வருடச் சரிவை எட்டியுள்ளது.
ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் 3வது முறையாக அந்நாட்டின் அதிபராக அறிவிக்கும் முன்பு அரசுக்கு எதிரானவர்களுக்குத் தூக்குத் தண்டனை, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது போன்ற வதந்திகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
3வது முறையாக அதிபர் பதவி
இந்த இக்கட்டான சூழ்நிலையில் 3வது முறையாக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ள ஜின் ஜின்பிங்-கிற்கு முதல் நாள் முதல் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள் போராட்டம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
2022 ஆம் ஆண்டில் சீனாவுக்கு ரஷ்யாவின் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தாலும் கொரோனா காரணமாக லாக்டவுன் மற்றும் ஜீரோ கோவிட் பாலிசி நடைமுறையில் இருந்த காரணத்தால் உற்பத்தி, ரீடைல் வர்த்தகம், ஏற்றுமதி, முதலீட்டுச் சந்தை ஆகியவை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.
சீனாவின் ஜிடிபி
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2022 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 5.5 சதவீதம் அளவீடு சீனாவின் பொருளாதார வளர்ச்சி அளவில் சுமார் 30 வருடத்தில் குறைவான அளவாகும்.
2021 அளவீடு
2021 ஆம் ஆண்டில் சீனாவின் ஜிடிபி அளவு சுமார் 8.1 சதவீத விரிவாக்கம் அடைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான சீனாவின் GDP வளர்ச்சி இலக்கு மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ப்ரீமியர் லீ கெகியாங்
சீன நாட்டின் உயர்மட்ட சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) அமைப்பில் சனிக்கிழமை காலை வருடாந்திர அதிகாரப்பூர்வ வளர்ச்சி இலக்கை ப்ரீமியர் லீ கெகியாங் வெளியிட்டு உள்ளார்.
1991 ஆம் ஆண்டு அளவு
2022 ஆம் ஆண்டிற்கான சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இலக்கு 5.5 சதவிகிதம் என்பது 1991 ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைவானதாகும். ப்ரீமியர் லீ கெகியாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட முக்கியத் தரவு, சீனாவின் நிதியியல் பற்றாக்குறை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தான், 2022 ஆம் ஆண்டில் இதன் அளவு 2.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் காலாண்டு தரவுகள்
மேலும், சீனா தனது மூன்றாவது காலாண்டு பொருளாதாரத் தரவுகள் வெளியீட்டைத் திட்டமிட்டே ஒத்திவைக்கப்பட்டது மூலம் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் சரிவடைந்துள்ளது தெளிவானது.
20வது காங்கிரஸ் கூட்டம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 20வது காங்கிரஸ் கூட்டத்தின் போது ஏன் திட்டமிட்ட நாளில் ஜிடிபி தரவுகள் வெளியிடப்படவில்லை என்பதற்கு எந்த விளக்கமும் அரசு தரப்பில் இருந்தும் அளிக்கப்படவில்லை. இதை ஏன் என கேட்க யாரும் இல்லாத அளவிற்குச் சீனாவில் ஜி ஜின்பிங் அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.
ஜி ஜின்பிங் ஆதிக்கம்
இதனால் சீனாவில் ஜி ஜின்பிங் தரவுகளை வெளியிட்டாலும் சரி, வெளியிடாவிட்டாலும் சரி அவரை அசைக்க முடியாது என்பது தான் உண்மை. இப்படி இருக்கையில் இவருடைய சீட்டு-க்கு எந்த பாதிப்பும் இல்லை..
3வது காலாண்டின் தரவுகள்
சீனா 3வது காலாண்டின் ஒட்டுமொத்த GDP அளவு தவிர, மாதாந்திர தொழில்துறை உற்பத்தி, எனர்ஜி உற்பத்தி, நிலையான சொத்து முதலீடு, சொத்து முதலீடு மற்றும் விற்பனை, ரீடைல் விற்பனை மற்றும் வீட்டுமனை விலைகள் ஆகியவற்றின் விவரங்களையும் வெளியிடவில்லை என தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications