அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக மோதல் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன தயாரிப்புகளுக்கு அதிக வரி விதித்ததன் பின்னணியில், பல சீன எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் உற்பத்தியாளர்கள் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் எலெக்ட்ரானிக்ஸ் கூறுகளை வாங்கி, தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற முடிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி கொள்கையின் மூலம் சீன பொருட்களுக்கு 125% வரி விதித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதன் காரணமாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்கள் அதிக விலைக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல், சீன உற்பத்தியாளர்களுக்கு புதிய ஆர்டர்கள் குறைந்து விட்டன. ஏனெனில் அமெரிக்கா மட்டும் அல்லாது பல நாடுகள் சீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் முடிவை எடுத்து வருகின்றன. இதனால் சீன உற்பத்தியாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், சீன எலெக்ட்ரானிக்ஸ் Spare parts உற்பத்தியாளர்கள் தங்கள் விற்பனையை மீண்டும் அதிகரிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு தள்ளுபடி விலைகளை வழங்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக, 5% வரை விலை குறைப்பை வழங்க முன்வந்துள்ளனர். இது போன்ற தள்ளுபடி சலுகை எலெக்ட்ரானிக்ஸ் துறையில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தத் துறையில் முப்பெரும் போட்டி இருப்பதால், லாப வரம்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் சீன Spare parts இறக்குமதி சுமார் 75% ஆக உள்ளது. இதன் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்பு செலவினைக் குறைத்து அதிக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு பெறுகின்றனர். உதாரணமாக தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, ஸ்மார்ட்போன் போன்ற உற்பத்தி நிறுவனங்கள் இந்த தள்ளுபடிகளை பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் திட்டங்களை வகுத்து வருகின்றன.
இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் கூறு(Electronic component) இறக்குமதி கடந்த நிதியாண்டில் 36.7% உயர்ந்து $34.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2019ஆம் நிதியாண்டில் $15.8 பில்லியனாக இருந்த இறக்குமதி தற்போது 118.2% அதிகரித்துள்ளது. இது மின்னணு Spare partsகளுக்கு இந்தியா வெளிநாடுகளை பெரிதும் சார்ந்திருப்பதைக் காட்டுகிறது.
முன்னாள் நிதியாண்டுகளில் இருந்து பார்த்தால் இந்திய உற்பத்தி துறை மெதுவாக வளர்ச்சி பெற்று வருவது உண்மை. ஆனால் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் போன்ற நிகழ்வுகள் இந்திய நிறுவனங்களுக்கு தற்காலிக லாபத்தை உருவாக்கும் வாய்ப்பு தருகின்றன. இந்திய நிறுவனங்கள் மே-ஜூன் மாதங்களில் இருந்து புதிய ஆர்டர்களை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவும், விற்பனையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
நிபுணர் கூறிய கருத்துக்கள், "சீன உற்பத்தியாளர்கள் தற்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவதால் விலை மறுபரிசீலனை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை" என கோத்ரேஜ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளை சீன உற்பத்தியாளர்கள் முக்கியமாகக் கருதி தள்ளுபடி வழங்குகின்றனர்" என தொலைக்காட்சி ஒப்பந்த உற்பத்தியாளர் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் நிர்வாகி கூறியுள்ளார்.
உலக வர்த்தகத்தில் உள்ள மாற்றங்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக உள்ளது. சீனாவின் தள்ளுபடி கொள்கை இந்திய உற்பத்தியாளர்களை பலப்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் இது நீண்ட கால வளர்ச்சிக்கு போதுமானதா அல்லது இது தற்காலிகமான ஒரு வர்த்தக வாய்ப்பா என்பது வருங்காலத்தில் தெரியும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications