பெய்ஜிங்: சீனாவின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி தரத்தில் ஏற்பட்ட தொடர் சரிவால் 25 வருடப் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி சீனாவை மட்டும் அல்லாமல் உலகச் சந்தையையும் கதிகளங்க வைத்தது.
இத்தகைய சூழ்நிலையிலும் இந்நாட்டின் அன்னிய முதலீடு அளவு 2015ஆம் ஆண்டை விடவும் 5.6 சதவீதம் அதிகமாக அளவில் 126 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு
பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும் சீன பங்குச்சந்தை கடந்த சில மாதங்களில் 3 முறை ஆட்டோமேடிக் ஷட்டவுன் ஆனது.
ஆனாலும் இந்நாட்டின் சேவை மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையின் மீது முதலீட்டாளர்களின் அதிகப்படியான நம்பிக்கையின் காரணமாகச் சீனாவில் அன்னிய முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது எனச் சீனா வர்த்தகத் துறை அமைச்சர் Gao Hucheng தெரிவித்தார்.
126 பில்லியன் டாலர்
2015ஆம் ஆண்டில் மட்டும் சீனா மிகப்பெரிய சரிவில் திளைத்த போதும் 5.6 சதவீத உயர்வுடன் 126 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது.
இத்தொகையில் 70 சதவீத முதலீடு சேவை மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தது குறிப்பிடத்தக்கது.
துறை சார்ந்த அன்னிய முதலீடு..
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் நிதியியல், கல்வி, கலாச்சாரம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகம் பெற இத்துறையில் முதலீட்டுக்கான சட்டத் திட்டங்களில் அதிகளவிலான தளர்வை அறிவிக்க உள்ளதாகவும் Gao Hucheng தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி
2014ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் 6.9 சதவீதமாகச் சரிந்து வளர்ச்சியில் 25 வருட பின்னுக்குத் தள்ளப்பட்டது.
நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி இலக்காக 6.5 முதல் 7 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது சீனா.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications