அலிபாபாவுக்கு வந்த புதிய பிரச்சனை.. சீன அரசின் நெருக்கடி..!

சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா-வின் முன்னாள் தலைவரும், நிறுவனருமான ஜாக் மா சீன வங்கி அமைப்பைப் பற்றியும், சீன நிர்வாகத்தைப் பற்றியும் செய்ய விமர்சனம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சீன அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அலிபாபா நிர்வாகத்தை மீடியா துறையில் இந்நிறுவனம் செய்துள்ள முதலீடுகளையும், நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீன அரசின் நெருக்கடி

சீன அரசின் நெருக்கடி

திங்கட்கிழமை வெளியான தகவல்கள் படி அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனத்தைச் சீனா அரசு தனது மீடியா முதலீடுகளை விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்ய உள்ளதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

அலிபாபா மீடியா கனவுகள்

அலிபாபா மீடியா கனவுகள்

கடந்த வருடம் அலிபாபா மீடியா துறையில் மிகப்பெரிய கனவுத் திட்டத்துடன் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து சீன மீடியா துறையை அதிர்ச்சி அடையச் செய்தது. இதன் வாயிலாக அலிபாபா தனது கனவுத் திட்டத்தைப் படிப்படியாக நிறைவேற்றி வந்தது.

அலிபாபா மீடியா முதலீடுகள்

அலிபாபா மீடியா முதலீடுகள்

ஆன்லைன் ரீடைல் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் மட்டும் இருந்து வந்த அலிபாபா தனது மீடியா கனவு திட்டத்தை அடைய சீனாவின் டிவிட்டர் எனப்படும் வெய்போ, செய்தி தளமான சௌத் சைனா மார்னிங் போஸ்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு முதலீடு செய்துள்ளது.

சீன அரசும் - அலிபாபாவும்

சீன அரசும் - அலிபாபாவும்

இந்த முதலீடுகள் அனைத்தையும் விற்பனை செய்ய வேண்டும் என் சீன அரசு தற்போது அலிபாபா குழுமத்திற்கு நெருக்கடி அளித்து வருகிறது. இதுகுறித்து எவ்விதமான கருத்தும் அலிபாபா தெரிவிக்கவில்லை. ஜாக் மா, சீனா அரசையும், சீன வங்கி அமைப்பையும் சில மாதங்களுக்கு முன்பாகக் கடுமையான கருத்துக்கள் உடன் விமர்சித்தார். இதன் பின்பு தான் அனைத்து பிரச்சனைகளும் துவங்கியது.

ஜாக் மா பேச்சு

ஜாக் மா பேச்சு

ஜாக் மாவின் அதிரடி பேச்சுக்குப் பின் இவர் பல வாரங்களாக வெளியுலகில் தென்படாமல் இருந்த காரணத்தால் ஜாக் மா காணவில்லை எனச் சீன சமுகவலைதளம் மட்டும் அல்லாமல் உலகளவில் பேசப்பட்டது.

வீட்டில் முடங்கிய ஜாக் மா

வீட்டில் முடங்கிய ஜாக் மா

இதற்கிடையில் ஜாக் மா தனது வீட்டிலேயே முடங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது, இதைத் தொடர்ந்து அலிபாபா சாம்ராஜ்ஜியம் அடுத்தடுத்த பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.

அடுத்தடுத்த வழக்குகள்

அடுத்தடுத்த வழக்குகள்

வர்த்தக முறைகேடு, மோனோபோலி வழக்கு எனச் சீனா அரசு அடுத்தடுத்து அலிபாபா மற்றும் அன்ட் குரூப் மீது வழக்குகளின் காரணமாக அலிபாபா குழுமத்தின் மொத்த நிர்வாகத்தையும் சீன அரசு படிப்படியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

XIAMI செயலி நிறுத்தம்

XIAMI செயலி நிறுத்தம்

சீனா அரசு கட்டுப்பாட்டிற்கு வந்த அலிபாபா பிப்ரவரி மாதம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பொழுதுபோக்கு துறைக்குள் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்ட அலிபாபா 2013ஆம் ஆண்டு XIAMI என்கிற பிரபலமான மியூசிக் செயலி நிறுவனத்தைக் கைப்பற்றியது.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில் எவ்விதமான நிதிநெருக்கடியும் இல்லாத போது இந்தச் செயலியை அலிபாபா பிப்ரவரி 5ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தியது. XIAMI செயலியின் முடக்கம் சீன அரசின் நெருக்கடி காரணமாகவே செயல்பட்டது என அனைவரும் அறிந்த நிலையில் அலிபாபா எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் சீன அரசு சொல்வதை அப்படியே செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+