அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்!

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் டிக் டாக்கின் நடவடிக்கைகளை சீனாவின் அரசாங்கம் ஒரு போதும் ஏற்காது. விற்பனை கட்டாயப்படுத்தப்பட்டால், வாஷிங்டனுக்கு எதிராக நடவடிக்கையினை சீனா எடுக்கலாம் என்றும் சீனா டெய்லி செவ்வாய்கிழமையன்று வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Recommended Video

TIK TOKகினை வாங்க கட்டாயம்! America மீது China நடவடிக்கை ?

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட, சீனாவின் பல செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது.

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

டிக் டாக்கிற்கு எச்சரிக்கை

டிக் டாக்கிற்கு எச்சரிக்கை


அதனைத் தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக் டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இது குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 15-க்குள் சரியான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், தடை செய்யப் போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிக் டாக்கினை வாங்குவது தொடர்பாக ஆய்வு

டிக் டாக்கினை வாங்குவது தொடர்பாக ஆய்வு


இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேசியதாக கூறினார். மேலும் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் கூறினார்.

அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை

அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை


இந்த நிலையில், டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை டிக் டாக் ஆப்பினை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

அனுமதிக்கப்பட்ட திருட்டு

அனுமதிக்கப்பட்ட திருட்டு

ஆனால் சீனாவின் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செயல்முறையானது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட திருட்டுக்கு ஒப்பாகும் என்றும் கூறியுள்ளது. ஒரு சீன நிறுவனத்தின் திருட்டை சீனா எந்த வகையிலும் ஏற்றும் கொள்ளாது. மேலும் அமெரிக்க நிர்வாகத்தின் திட்டமிட்ட இந்த செயலை மேற்கொண்டால், அதற்கு பதிலளிக்க ஏராளமான வழிகள் உள்ளன.

மிகப்பெரிய ஸ்டார்டப்

மிகப்பெரிய ஸ்டார்டப்

உலகெங்கும் பல நாடுகளில் பரவி வரும் டிக் டாக்கிற்கு வெளி நாடுகளில் கிடைத்த வெற்றி, அது உலகின் மிகப்பெரிய ஸ்டார்டப் ஆக உருவெடுக்க வழி வகுத்தது. ஆனால் இதனை அமெரிக்கா சட்டம் இயற்றுபவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும்

அரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும்

அமெரிக்கா நிறுவன பட்டியலில் டிக் டாக்கினை சேர்ப்பதன் மூலம், பை டான்ஸின் மதிப்பு மிக்க சொத்தினை முடக்குவதற்கான அதிகாரம் டிரம்பிற்கு இப்போது உள்ளது.

ஏனெனில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவரிடம் தொலைப்பேசியில் பேசிய போது, டிக் டாக்கினை மைக்ரோசாப்ட் வாங்கினால், அரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

இது நியாயம் தான்

இது நியாயம் தான்

அது மட்டும் அல்ல அவர்கள் விற்கும்போது எங்களுக்கு ஒரு தொகை கிடைக்க வேண்டும். ஏனென்றால் இது எங்களால்தான் நடக்கிறது. யாரும் இப்படி யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அப்படிதான் யோசிப்பேன். அதுதான் நியாயம் எனவும் டிரம்ப் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

சமூக வலைதளத்தில் ஒரு தடம்

சமூக வலைதளத்தில் ஒரு தடம்

அமெரிக்காவின் ஒடுக்கு முறையானது பல தொழில் துறையில் பலரை பிளவுபடுத்தியுள்ளது. மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள நிலையில், டிக் டாக்கை வாங்குவதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தனது தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முயன்று வருகிறது.

அமெரிக்காவின் தந்திரம்

அமெரிக்காவின் தந்திரம்

இது இப்படி எனில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என பைட் டான்ஸ் இயக்குநர்கள் நினைப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+