DiDi-ஐ கட்டம் கட்டி தூக்கும் சீன அரசு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் பிளான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன அரசு சமீபத்தில் பல டெக் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது மறக்க முடியாது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சீன அரசு புதிதாகத் தகவல் பாதுகாப்பு கொள்கையை அறிவித்துள்ளது.

இதனால் டெக் நிறுவனங்கள் மீதான நடவடிக்கை குறைந்திருந்தாலும், கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் வர்த்தகம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஆனால் சீனா அரசு அந்நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான DIDI மீது விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கவில்லை, இது பெரும் சர்ச்சையாக இருந்த நிலையில் தற்போது சீனா அரசு மிக முக்கியமான ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஆன்லைன் டாக்ஸி நிறுவனம் Didi

ஆன்லைன் டாக்ஸி நிறுவனம் Didi

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான Didi, ஜூலை மாதம் தனது நிறுவனத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு சுமார் 4.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்தது. ஆனால் அடுத்த 2 நாட்களில் சீன அரசு DIDI நிறுவனத்தின் மீது மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது, இதனால் மொத்த நிறுவனம் முடங்கியது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

Didi அமெரிக்க ஐபிஓ

Didi அமெரிக்க ஐபிஓ

ஐபிஓ வெளியிட்ட மகிழ்ச்சியில் இருந்த Didi நிறுவனத்திற்குச் சீன கட்டுப்பாட்டு அமைப்புப் புதிதாக வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என்றும் புதிதாக எந்த ஆர்டரையும் செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

செயலிகள் தடை
 

செயலிகள் தடை

இதுமட்டும் அல்லாமல் சீன ஆப் ஸ்டோரில் இருந்து Didi மற்றும் அதன் கிளை நிறுவன செயலிகள் அனைத்தையும் நீக்கப்பட்டு, சீன அரசு சைபர் செக்யூரிட்டி அமைப்பு இந்தச் செயலிகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

Didi மீதான குற்றச்சாட்டுகள்

Didi மீதான குற்றச்சாட்டுகள்

சீனாவின் சைபர்ஸ்பேஸ் வாட்ச் டாக் அமைப்பு Didi நிறுவனம் முறையற்ற வகையில் சீன வாடிக்கையாளர்களின் தனிநபர் தரவுகளைத் திருடி வருவதாகவும், இந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து வாடிக்கையாளர்களின் பழக்கம் வழக்கத்தைப் பிக் டேட்டா அனாலிசிஸ் செய்து நிறுவனத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் சந்தையில் மோனோபோலியாக இயங்குகிறது என்றும் இந்நிறுவனத்தின் மீது சீன அரசு அடுக்கடுக்காகக் குற்றங்களைச் சுமத்தியது.

சீன அரசு

சீன அரசு

இந்த நிலையில் சீன அரசு, தனது பணப் பலத்தின் வாயிலாகவும், அதிகாரத்தின் வாயிலாகவும் அரசு கட்டுப்பாட்டு நிறுவனங்கள் வாயிலாக DIDI நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. பெய்ஜிங் அரசு DIDI நிறுவனத்தில் முதலீடு செய்ய மிகப்பெரிய தொகையை முன்வைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சீன அரசின் திட்டம்

சீன அரசின் திட்டம்

சீன அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான Shouqi Group வாயிலாகப் பல்வேறு அரசு முதலீட்டு அமைப்புகள் இணைந்து DIDI குளோபல் இன்க் நிறுவனத்தின் மிகப்பெரிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

நிர்வாகத்தில் இடம்

நிர்வாகத்தில் இடம்

தற்போது சீன அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது DIDI நிறுவனத்தில் அரசு கோல்டன் ஷேர் அதாவது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கான பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாகத் தெரிகிறது.

Shouqi குரூப்

Shouqi குரூப்

Shouqi Group என்பது பெய்ஜிங் டூரிசம் குரூப் பிரிவுக்குள் வரும் ஒரு நிறுவனம், பெய்ஜிங் டூரிசம் குரூப் சீனாவில் டிராவல் ஏஜென்சி, மால், உணவகங்கள், ஹோட்டல் ஆகியவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் இயக்கி வருகிறது.

Shouqi Yueche செயலி

Shouqi Yueche செயலி

2015ல் பெய்ஜிங் டூரிசம் குரூப் Shouqi Group வாயிலாக Shouqi Yueche என்ற ஆன்லைன் டாக்ஸி சேவை தளத்தை உருவாக்கியது. இந்தத் தளத்தில் தற்போது 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

DIDI கைப்பற்றல்

DIDI கைப்பற்றல்

DIDI நிறுவனத்தின் கைப்பற்றல் மூலம் சீன அரசே ஆன்லைன் டாக்ஸி சேவை பிரிவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் Shouqi Yueche தளத்தை இதனுடன் இணைக்கப்பட்டுச் சேவை சீனா முழுவதும் அரசே கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

டிக்டாக், ஹலோ

டிக்டாக், ஹலோ

இதேபோன்ற நடவடிக்கையைத் தான் சீன அரசு பையிட் டான்ஸ் நிறுவனத்தில் செய்தது. டிக்டாக், ஹலோ ஆகிய முக்கியமான செயலிகளின் தாய் நிறுவனம் தான் இந்தப் பையிட் டான்ஸ் இதன் மூலம் பையிட் டான்ஸ் நிர்வாகக் குழுவில் சீன அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.

DIDI பங்குகள்

DIDI பங்குகள்

ஐபிஓ-விற்குப் பின்பு DIDI நிறுவனத்தின் 58 சதவீத பங்குகளை இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் Cheng Wei மற்றும் தலைவர் Jean Liu ஆகியோரிடம் மட்டும் சுமார் 58 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர்.

 முக்கிய முதலீட்டாளர்கள்

முக்கிய முதலீட்டாளர்கள்

மேலும் இந்நிறுவனத்தில் சாப்ட்பேங்க், டைகர் குளோபல், Temasek, உபர் ஆகிய நிறுவனங்கள் பங்குகளை வைத்துள்ளது. சீனாவில் இயங்கி வந்த உபர் நிறுவனத்தையும் வர்த்தகத்தையும் DIDI மொத்தமாகக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம் தெரியுமா..?

என்ன காரணம் தெரியுமா..?

இவ்வளவு பிரச்சனைக்கும் என்ன காரணம் தெரியுமா..? DIDI நிறுவனம் சீன அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கும் Cyberspace Administration of China அமைப்பின் அறிவுரைக்கு மீறி அமெரிக்கப் பங்குச்சந்தையில் தனது ஐபிஓ-வை வெளியிட்டது.

அரசை எதிர்த்தால் இதுதான் நடக்கும்

அரசை எதிர்த்தால் இதுதான் நடக்கும்

DIDI நிறுவனம் அரசையே எதிர்த்த காரணத்தால் அரசு கட்டம் கட்டி தூக்கி வருகிறது. சீன அரசு இந்த நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறுவது தகவல் பாதுகாப்பு என்பதால் யாராலும் எதிர்க்க முடியாத நிலை உள்ளது.

இந்தியா - சீனா

இந்தியா - சீனா

சீனாவின் அரசு தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு முன்னணி நிறுவனங்களைக் கைப்பற்றி மேலும் வலிமையாகி வருகிறது, இது சரியா தவறா என்பது வேறு. ஆனால் இந்தியாவில் அரசு தன்னிடம் இருக்கும் சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது.

எது சரி.. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க...

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Govt plans to take ride-sharing DiDi under control with massive investment

China Govt plans to take ride-sharing DiDi under control with massive investment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X