சீன அரசு அறிவிப்பால் ஓரேநாளில் 18.4 பில்லியன் டாலர் இழப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன அரசு ஒவ்வொரு துறையாக அடுத்தடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொருட்டு அனைத்து துறைகளின் முன்னணி நிறுவனங்களைக் குறிவைத்து நிர்வாகச் சீர்திருத்தம், விதிமுறை மாற்றம், தகவல் பாதுகாப்பு, மக்கள் நலன் பெயரில் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

அலிபாபா-வை பந்தாடும் அரசு.. சீனாவின் அடுத்த அதிரடி..!

கசினோ பிரிவு

கசினோ பிரிவு

இந்த நிலையில் சீன அரசு இதுநாள் வரையில் டெக், டிஜிட்டல் சேவை, போக்குவரத்து, கல்வித் துறைகளின் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் தற்போது சீனா மற்றும் ஹாங்காங் பகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் விரும்பக் கூடிய ஒன்றாகவும் இருக்கும் கசினோ விளையாட்டு பிரிவைக் கையில் எடுத்துள்ளது.

 சீன அரசு

சீன அரசு

சீன அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கசினோ இயக்குவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக உலகின் மிகப்பெரிய கேமிங் மற்றும் கசினோ ஹப் ஆக விளங்கும் மக்காவ் பகுதியில் இருக்கும் இத்துறை நிறுவனங்களைக் கண்காணிக்க அரசு தரப்பில் புதிதாக ஒரு கண்காணிப்பாளரை நியமிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

மக்காவ் கசினோ
 

மக்காவ் கசினோ

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் மக்காவ் பகுதியில் இருக்கும் 6 முன்னணி கசினோ நிறுவனங்களின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 18.4 பில்லியன் டாலர் சரிந்து, இத்துறை முதலீட்டாளர்களுக்கு வரலாறு காணாத பாதிப்பைக் கொடுத்துள்ளது.

மக்காவ் பகுதி

மக்காவ் பகுதி

ஹாங்காங் தெற்கு பகுதியில் இருக்கும் சிறிய பகுதி தான் மக்காவ் , இதை ஆசியாவின் லாஸ் வேகாஸ் என அழைக்கப்படும் அளவிற்கு இங்குக் கசினோ, மால் மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த பகுதி. 1999 வரையில் போர்ச்சுகீஸ் பகுதியாக இருந்த நிலையில் தற்போது சீன அரசின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

18.4 பில்லியன் டாலர் இழப்பு

18.4 பில்லியன் டாலர் இழப்பு

சீன அரசின் அறிவிப்பு வெளியான பின்பு மக்காவ் பகுதியில் இருக்கும் 6 முக்கியக் கசினோ நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ஓரே நாளில் சுமார் 23 சரிந்து மொத்த 18.4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதிலும் முக்கியமான அமெரிக்கக் கசினோ நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இதில் முக்கியமான சேன்ட்ஸ் சீனா லிமிடெட் 33 சதவீதம், Wynn மக்காவ் லிமிடெட் 34 சதவீதம், கேலக்சி எண்டர்டெயின்மென்ட் குரூப் 20 சதவீதம் வரையில் சரிந்தது. மேலும் வைன் ரெசார்ட்ஸ் லிமிடெட், லாஸ் வேகாஸ் சேன்ட்ஸ் கார்ப், எம்ஜிஎம் ரெசார்ட்ஸ் இண்டர்நேஷன்ல் ஆகியவை 2வது நாளாகச் சரிந்து வருகிறது. இதில் பல நிறுவனங்கள் கடந்த 10 வருடத்தில் பார்க்காத சரிவை சந்தித்துள்ளது.

45 நாள் மக்கள் கருத்து

45 நாள் மக்கள் கருத்து

சீனா - ஹாங்காங் நாடுகளில் சூதாட்டத்தை அரசு அனுமதியுடன் நடக்கும் ஒரு இடம் என்றால் அது மக்காவ் மட்டுமே. இந்த நிலையில் விதிமுறைகள் மாற்றம் செய்யும் முன்பு செம்படம்பர் 15ஆம் தேதி துவங்கி 45 நாள் மக்கள் கருத்துக்களைக் கேட்ட பின்பு விதிமுறை மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் எனச் சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Govt wants to Tightens Grip on casinos: Macau Casinos lost $18 Billion in a day

China Govt wants to Tightens Grip on casinos: Macau Casinos lost $18 Billion in a day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X