சீன அரசு கிரிப்டோ வர்த்தகச் சேவையை அளிக்க நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களையும் கிரிப்டோ வர்த்தக எதிராக நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ள வேளையில் எச்சரிக்கையுடன் செயல்பட எச்சரித்துள்ளது.
புதிய தடை உத்தரவு
இப்புதிய தடை உத்தரவின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பேமெண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிரிப்டோகரன்சி தொடர்புடைய எந்தச் சேவைகளையும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி சேவை ரத்து
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கிரிப்டோகரன்சி தொடர்பாக ரெஜிஸ்ட்ரேஷன், டிரேடிங், கிளியரிங், செட்டில்மென்ட் என எந்தச் சேவைகளையும் அளிக்கக் கூடாது என இந்த 3 வர்த்தகத் துறையின் நிர்வாக அமைப்புகள் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சீனா அரசு
சீனா அரசு தற்போது சீனாவில் இயங்கி வரும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் இயங்க தடை விதித்துள்ளது. ஆனால் கிரிப்டோ வைத்திருக்க எவ்விதமான தடையும் விதிக்கவில்லை.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஆபத்தானது
மேலும் இந்தக் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஆபத்தானது என்றும், இதற்கு நிலையான மதிப்பீடு இல்லை என்றும், விர்ச்சுவல் நாணயத்திற்கு விர்ச்சுவலாக விலையை நிர்ணயம் செய்யப்பட்டு இயங்குவதால் இதன் விலையை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் எனவும் சீன அரசு தனது தடை உத்தரவில் தெரிவித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு
சீனா அரசின் இந்த அறிவிப்பால் இன்று பிட்காயின் மதிப்பு 25 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து 43,870 டாலரில் இருந்து 30,201.96 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் முதலீடு செய்துள்ள கிரிப்டோ முதலீடுகளின் மதிப்பு பெரிய அளவில் குறையும்.
பிற கிரிப்டோகரன்சிகளும் சரிவு
இதேபோல் எதிரியம் 3,469.87 டாலரில் இருந்து 1,902.08 டாலராகச் சரிந்து 30 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது. மேலும் ரிப்பிள் 1.65 டாலரில் இருந்து 0.88 டாலர் வரையில் சரிந்து சுமார் 35 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.
டோஜ்காயின் பெரிய வீழ்ச்சி
இதோடு தற்போது கிரிப்டோ சந்சையில் மிகவும் பிரபலமாக விளங்கும் டோஜ்காயின் மதிப்பு 0.48 டாலரில் இருந்து 0.21 டாலராகக் குறைந்து 50 சதவீதம் வரையில் சரிந்து கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
சீன முதலீட்டாளர்கள் நிலை
கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் சீன முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சீன அரசின் தடை உத்தரவின் மூலம் கிரிப்டோ விற்பனை செய்ய முடியாமல் சீன முதலீட்டாளர்கள் தடை பெற்று நிற்கின்றனர். கிட்டத்தட்ட சீன முதலீட்டாளர்கள் கையில் இருக்கும் மொத்தமும் கிரிப்டோவும் முடங்கியுள்ளது.
சீனாவிலேயே கிரிப்டோ முடங்கியது
சீனாவில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் இயங்க தடைவிதிக்கப்பட்டு உள்ள நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் தங்கள் கைகளில் இருக்கும் கிரிப்டோவை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
பெரிய அளவிலான சரிவு
இதன் காரணமாகவே தான் கிரிப்டோ சந்தையில் முன்னணி கிரிப்டோகரன்சி அனைத்தும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இந்தச் சரிவில் இருந்து முதலீட்டாளர்கள் மீண்டு வருவது மிகவும் கடனம் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications