பெய்ஜிங்: உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, 2015ஆம் ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் 6.9 சதவீதமாத பதிவாகியுள்ளது.
2013-14ஆம் ஆண்டுக் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போட தயாராகி வந்த சீனா, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி பொருட்களின் தரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, சீனா வளர்ச்சியில் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.
2015ஆம் ஆண்டில் உச்சக்கட்டமாக 25 வருட சரிவை எட்டி 6.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சீனா விரும்பப்படாத முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய ரூபாய்க்கு எதிரான சீன யுவான் நாணய மதிப்பை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.
1990இல்..
டியானாமென் ஸ்கொயர் நிகழ்வின் எதிரொலியாக 1990ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 3.8 சதவீதமாகப் பதிவாகியது. இதனால் சீன மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இத்தகைய நிலையை நோக்கித் தான் தற்போது சீனா பயணம் செய்வதாகச் சந்தை முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலக்கு
2015ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்த சீன தலைவர்கள், தற்போது குறைவான அளவு பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார வடிவத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி புதிய முதலீட்டு மற்றும் ஏற்றுமதி வடிவம், அதிலும் உள்நாட்டுச் சந்தைக்கு ஏற்ற வகையிலும், வலுப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளனர் சீன தலைவர்கள்.
சேவைத் துறை
இந்திய சந்தையைப் போலவே சீன சந்தையிலும் சேவைத்துறை 50 சதவீதத்திற்கும் அதிகமான ஜிடிபி-யை பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஜிடிபியில் 50.5 சதவீதம் சீன சந்தையுடையது.
அதிர்ப்தியில் முதலீட்டாளர்கள்
2015ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் சீனாவின் மொத்த வளர்ச்சி அளவு 6.8 சதவீதமாகக் குறைந்து சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
சர்வதேச சந்தையில் சீனா மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய வீழ்ச்சி ஆசிய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டுச் சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும். இதனால் சீனா மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்பது உறுதி.
நிலைப்பாடு
மேலும் நாட்டின் பொருளாதாரம் நிலைப்படும் வகையில் செயல்பட்டும் வரும் சீன அரசு, உள்கட்டமைப்பு பணிகளையும் அதிகளவில் முக்கியமானதாகக் கருதி செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications