மூட்டை கட்டப்படும் பிட்காயின் உற்பத்தி தளங்கள்.. வைரல் வீடியோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல வருடமாகச் சீனாவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியை மிகவும் பிரம்மாண்டமாக உற்பத்தி செய்து வந்த நிலையில் சீன அரசின் தடை உத்தரவு கிரிப்டோ உற்பத்தியை மொத்தமாக முடங்கியுள்ளது.

 

உலகளவில் பிட்காயின் உற்பத்தி சந்தையில் சுமார் 70 சதவீதம் சீனாவில் தான் உள்ளது.

சீனாவின் முடிவு

சீனாவின் முடிவு

2030ஆம் ஆண்டுக்குள் co2 வெளியேற்றத்தை 65 சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் இந்த இலக்கிற்குக் கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்கள் பெரும் தடையாக இருப்பது மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கு ஆபத்தானது எனக் கருதி கிரிப்டோகரன்சி உற்பத்திக்கும், வர்த்தகத்திற்கும் தடை விதித்துள்ளது.

4 முக்கியப் பகுதிகள்

4 முக்கியப் பகுதிகள்

முதல் கட்டமாகச் சீன அரசு Xinjiang, Inner Mongolia, Sichuan மற்றும் Yunnan ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கும் கிரிப்டோகரன்சி உற்பத்தி தளங்களைக் குறிவைத்து மூட திட்டமிட்டது. இதில் Sichuan பகுதியில் தான் அதிகளவிலான கிரிப்டோகரன்சி உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்சார உற்பத்தி
 

மின்சார உற்பத்தி

Xinjiang, Inner Mongolia பகுதியில் தான் சீனாவின் மிகப்பெரிய நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தளம் உள்ளது. எனவே முதல் கட்டமாகச் சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருக்கும் கிரிப்டோகரன்சி உற்பத்தி தளங்கள் மூடப்பட்டது. இதேபோல் Sichuan மற்றும் Yunnan பகுதியில் தான் மிகப்பெரிய ஹைட்ரோ மின்சார உற்பத்தி தளம் உள்ளது.

Sichuan பகுதி

Sichuan பகுதி

தற்போது சீன அரசு Sichuan பகுதியில் இருக்கும் 26 கிரிப்டோகரன்சி உற்பத்தி தளங்கள் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சீன அரசு கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்களுக்கான மின்சார இணைப்பை நேற்று முதல் துண்டித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டம்

வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டம்

சீனாவில் இருக்கும் பல கிரிப்டோகரன்சி உற்பத்தி தளங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வரும் நிலையில் அடுத்து மத்திய ஆசியா, வட அமெரிக்கா, பராகுவே பகுதிகளுக்குச் சீன கிரிப்டோகரன்சி உற்பத்தி நிறுவனங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் கனிம மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் ஈரான்,
கஜகஸ்தான், ஆகிய நாடுகளுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.

26 கிரிப்டோ உற்பத்தி தளங்கள் மூடல்

26 கிரிப்டோ உற்பத்தி தளங்கள் மூடல்

இந்நிலையில் தற்போது Sichuan பகுதியில் இருக்கும் 26 கிரிப்டோகரன்சி உற்பத்தி தளங்கள் மூடப்பட்டு வரும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட cryptocurrency mining தளம் தற்போது மூடப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China has decided to clamp down on crypto miners - viral video

China has decided to clamp down on crypto miners - viral video
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X