இன்றைய காலகட்டத்தில் கோதுமை உணவு பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகின்றது. இத்தகைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் கோதுமையின் விலையானது 2008க்கு பிறகு மீண்டும் மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்ரைன் சர்வதேச அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.
விலை 40% அளவுக்கு ஏற்றம்
இதற்கிடையில் தான் கோதுமை விலையானது 2008க்கு பிறகு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு விலையானது 40% அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
லாகிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து பாதிப்பு
உக்ரைன் போரின் மத்தியில் பல முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் லாகிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து துறையானது இணைப்புகளை துண்டித்துள்ளது. இந்த போர் பதற்றத்தின் மத்தியில் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே ரஷ்யாவுடனான வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா இன்சூரன்ஸ் மற்றும் சரக்கு செலவினங்களையும் தவிர்த்து வருகின்றது.
விலை தொடர் ஏற்றம்
ரஷ்யா - உக்ரைனும் மக்காச்சோளம், சூரியகாந்தி எண்ணெய்உள்ளிட்ட பலவற்றிலும் முக்கிய சப்ளையர்களாக உள்ளன. மக்காச்சோளம் 2012க்கு பிறகு உச்சத்தினை எட்டியுள்ளது. சோயாபீன் மற்றும் பால்ம் ஆயில் வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளன. இதற்கிடையில் சோளம் மற்றும் கோதுமையை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, அத்தியாவசிய பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விலையை தூண்டலாம்
இது தொடர்ந்து அதிகரித்து வரும் விலைக்கு மத்தியில், விலையேற்றத்தில் இருந்து தங்களை பாதுகாக்க பயன்படும் என திட்டமிட்டு வருகின்றது. இது மேற்கொண்டு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். அதிகரித்து வரும் பதற்றம், மத்திய வங்கிகளின் நடவடிக்கை உள்ளிட்ட பலவும் உணவு பணவீக்கத்தினை தூண்டுகின்றது. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் மத்திய வங்கிகளில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
சீனாவில் நடவடிக்கை
இதற்கிடையில் சீன இறக்குமதியாளர்கள் சமீபத்தில் அமெரிக்க சோயாபீன்ஸை 20 கார்கோவும், 10 முறை மக்காச்சோளத்தினையும் முன் பதிவு செய்துள்ளனர். ஆக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கும் மத்தியில், சத்தமே இல்லாமல் பொருட்களை வாங்கி பதுக்க தொடங்கியுள்ளது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications