உலகின் முன்னணி வல்லரசு நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும் சீனாவும் போட்டிப்போட்டு வந்த நிலையில், அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர், கொரோனா தொற்று பாதிப்பு, ஜனவரி மாதம் வரையில் இருந்த கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் உலகில் பல நாடுகள் எதிர்கொள்ளும் Middle - Income Trap-ல் சிக்கிக்கொண்டு உள்ளது.
உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவுக்கு டிரம்ப் ஆட்சி காலத்தில் இருந்தே அதிகப்படியான நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பல நாடுகளில் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது சீனா.

இதோடு சேர்ந்து கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு பின்பு சீனாவின் உற்பத்தி, வர்த்தகம் அனைத்தும் வளர்ச்சி பாதைக்கு மீண்டு வந்தாலும் உலக நாடுகள் ரெசிஷன் அச்சத்தில் இருக்கும் வேளையில் சீனா பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய முடியவில்லை.
இதை உறுதி செய்யும் வகையில் சீனாவின் முன்னணி துறைமுகங்களில் காலியான கண்டெய்னர் பெட்டிகள் லட்ச கணக்கில் குவிந்துக்கிடக்கிறது. 2022 ஆம் ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டு சீன ஏற்றுமதி சந்தை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காலியான கண்டெய்னர் பெட்டிகள் குறித்த வீடியோ கடந்த ஒரு மாதமாக இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Middle - Income Trap பிரச்சனை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் ஒன்றாக இருந்தாலும், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தனது மக்களின் திறனை வளர்ச்சி innovation அடிப்படையாக கொண்ட பொருளாதார நாடாக மாறியதால் எளிதாக இதில் இருந்து மீண்டது.

ஆனால் சீனா உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் என்பதால் Middle - Income Trap பிரச்சனை எதிர்கொள்வது என்பது சாதாரணமாக விஷயம் இல்லை. இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக துறைவாரியாக கவனம் செலுத்தி முதலீட்டு செய்து ஒட்டுமொத்த உற்பத்தியை மேம்படுத்தி சீன பொருளாதாரத்தை வல்லரசாகும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
ஆனால் சீனாவின் இந்த முயற்சிக்கு தற்போதைய சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் கைகொடுக்காது என்பது தான் முக்கியமான பிரச்சனை. மேலும் அடுத்த 5 வருடம் சீனாவுக்கு மிகவும் முக்கியமான காலம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக தனிநபர் வருமானத்தை உயர்த்துவது தான் முக்கிய இலக்காக கொண்டு செயல்படும் என China Centre for International Economic Exchanges துணை தலைவர் Wang Yiming தெரிவித்துள்ளார்.
Middle - Income Trap என்பது ஒரு நாடு வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே சிக்கிக்கொள்ளும். உதாரணமாக ஒரு உற்பத்தி செய்யும் பொருட்களை தான் நினைத்த விலைக்கு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் குறைவான விலைக்கு விற்பனை செய்யும் பட்சத்தில் அந்நாட்டு மக்களின் சராசரி வருமானம் தொடர்ந்து நடுத்தர அளவிலேயே இருக்கும்.
இதனால் வல்லரசு நாடுகளுக்கு இணையாக சராசரி வருமானத்தை ஈட்டும் வாய்ப்பை இழக்கும். இந்த Middle - Income Trap என்ற சொல்லை உலக வாங்கி 2006ல் உருவாக்கியது, மேலும் Middle - Income நாடுகளின் சராசரி மக்கள் வருமானம் 1000 முதல் 12000 டாலர் வரையில் இருக்கும் என உலக வங்கி நிர்ணயம் செய்துள்ளது. 12000 டாலருக்கு அதிகமான per capita income கொண்ட நாடுகள் வல்லரசு நாடுகள்.


Click it and Unblock the Notifications