சீனா வேண்டாம் என சென்ற நாடுகள்.. மீண்டும் சீனாவில் குவியும் சூட்சுமம்.. என்ன தான் நடக்கிறது அங்கு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே இதற்கு முன்பு காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டுள்ளன. அதிலும் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.

இரண்டு வருடங்களாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள், அவ்வப்போது சுமூக பேச்சு நிலவி வந்தாலும், தொடர்ந்து பிரச்சனைகள் என்னவோ அதிகரித்து வருகிறது.

இதனால் சீனாவின் வளர்ச்சியானது குறைந்து வரும் நிலையில், முன்பே 2020-ல் அதன் பொருளாதார வளர்ச்சி 6% வரை குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இதற்கிடையில் இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வந்தாலும், அதே நேரத்தில் வர்த்தக நடவடிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம்.

மிகப்பெரிய வர்த்தக பங்காளி

மிகப்பெரிய வர்த்தக பங்காளி

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய வர்த்தகத்தினை கட்டுப்படுத்துவதால், அமெரிக்கா விவசாயிகளுக்கும் பிற ஏற்றுமதியாளர்களுக்கும் ஒரு அரிய பிரகாசமான வளர்ந்து வரும் இடமாக சீனா மாறியுள்ளது. அமெரிக்காவுடனான பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தாலும், தற்போது உலகளாவிய அளவில் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக திரும்ப தனது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

வர்த்தகம் அதிகரிப்பு

வர்த்தகம் அதிகரிப்பு

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 39.7 பில்லியன் டாலாராக உயர்ந்தது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 43 சதவீதம் அதிகமாகும். மேலும் மெக்ஸிகோ மற்றும் கனடாவை மீண்டும் மிஞ்சுவதற்கு இது போதுமானது என்றும் ஒர் அறிக்கை கூறுகின்றது. இது கடந்த ஜனவரி மாதத்தில் முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் சீனா, அமெரிக்காவின் விவசாய பொருட்கள் அதிகளவில் நடந்த வர்த்தகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா வளர்ச்சி காணும்

சீனா வளர்ச்சி காணும்

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் அக்டோபர் 2018ல் நிர்ணயிக்கப்பட்ட 61.4 பில்லியன் டாலர் வர்த்தகமானது, கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஒப்பந்ததினை எட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் கூட இந்த ஆண்டு சாதகமான சாதகமான வளர்ச்சியினைப் பெறக்கூடிய ஒரே பெரிய உலகப் பொருளாதாரம் சீனா தான் என்று உலக வங்கி கணித்துள்ளது.

சர்வதேச ஜிடிபியில் சீனா முக்கிய பங்கு

சர்வதேச ஜிடிபியில் சீனா முக்கிய பங்கு

2020 மற்றும் 2021ம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின், மிகப்பெரிய இயந்திரமாக சீனா இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என அமெரிக்கா சீனா வர்த்தக கவுன்சிலின் தலைவர் கிரேக் ஆலன் கூறியுள்ளார். மேலும் இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் மிக பயனடையக் கூடும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனா வேகம் காட்டவில்லை

சீனா வேகம் காட்டவில்லை

எனினும் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் சற்றே அதிகரித்தாலும், வர்த்தக உடன்படிக்கையின் படி, கொள்முதல் செய்ய சீனா இதுவரை வேகம் காட்டவில்லை. மேலும் வெளி நாட்டு நிறுவனங்களின் அறிவுசார் சொத்து உரிமைகளின் அமல்படுத்துவதில் சீனா எவ்வளவு தூரம் செல்லும் என்பதை இன்னும் காட்டவில்லை.

வர்த்தக போரின் தாக்கம்

வர்த்தக போரின் தாக்கம்

சீன போட்டியாளர்கள் ஏற்கனவே தங்களது வர்த்தக ரகசியங்களை கையகப்படுத்துவதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, தற்போது வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா பொருட்களை வாங்க சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. சோயாபீன்ஸ், சோளம் மற்றும் சோயாபீன்ஸ் மற்றும் பிற பண்ணை ஏற்றுமதியினை ஏற்றுமதி செய்யும் அமெரிக்க விவசாயிகளும் இதன் தாக்கத்தினை உணர்ந்தனர்.

சீன இறக்குமதி அதிகரிப்பு

சீன இறக்குமதி அதிகரிப்பு

எனினும் வர்த்தக போருக்கு முன்பு வாங்கியதை விட, தற்போது சீனா சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பயிர்கள் வாங்குவதை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உதாரணம் தான் அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் மொத்த விற்பனையில் மூன்றில் இரண்டு மடங்கு சீனா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் பதற்றம்

அதிகரித்து வரும் பதற்றம்

இதற்கிடையில் தற்போது வர்த்தகத்திற்கு அப்பாலும், கொரோனாவால் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சீனாவின் மீது தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா. ஏனெனில் கொரோனாவினை பரப்பியதே சீனா தான் என குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா.

ஒப்பந்தம் எட்டப்படுமா?

ஒப்பந்தம் எட்டப்படுமா?

எனினும் இப்படி பல அழுத்தங்கள் ஒரு புறம் இருந்து வந்தாலும், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தினை எட்ட முயற்சிப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது பொருளாதார காரணங்களுக்காக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தினை விட, அதற்கு முன்னரே இலக்கினை அடைய முடியும் என்று நான் சந்தேகிக்கிறேன் என்று பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர் நேஷனல் எக்னாமிக்ஸின் மூத்த நிபுணர் கூறியுள்ளார்.

பாதிக்கப்படலாம்

பாதிக்கப்படலாம்

எது எப்படியோங்க? கொரோனாவினால் ஒருபுறம் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு இருந்தாலும், மறுபுறம் சத்தமேயில்லாமல் இரு நாடுகளும் வர்த்தகத்தினை அதிகரித்து கொண்டு தான் வருகின்றன. எனினும் சில வர்த்தகங்கள் சுற்றுலா கல்வி வழியாக இருப்பதால், கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக அவை பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China is a bright spot for US farmers and other exporters

China is a bright spot for US farmers and other exporters as the coronavirus pandemic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X