ரஷ்யவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்திய ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தற்போது சீனாவும் அதே பாணியை பின்பற்றியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு அந்த நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல நாடுகளை அணி சேர்த்து வருகின்றது.
பல நாடுகளையும் ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தத்தினை கொடுக்க நிர்பந்தம் செய்து வருகின்றது.
பல நாடுகளும் தடை
இதற்கிடையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இந்திய ரூபாயில் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கிடையில் சீனாவும் அந்த நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பில் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு மத்தியில் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா மீது பல நாடுகளும் பல தடைகளை விதித்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவின் முக்கிய வணிகமான கச்சா எண்ணெய் , நிலக்கரிக்கு தடை விதித்துள்ளன. சில நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டு வருகின்றன.
ரஷ்யாவின் முயற்சிகள்
இந்த நிலையில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த ரஷ்யா பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அதில் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவுக்கு ரூபாயிலும், சீனாவுக்கு யுவானிலும் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் அமெரிக்கா நினைப்பதுபோல முழுமையாக முடங்கி விடாது.
ரஷ்யாவினை பாதிக்காது?
மாறாக பெரியளவில் இல்லாவிட்டாலும் நிச்சயம் ரஷ்யாவில் பணப்புழக்கம் என்பது மேம்படும். இதனால் மற்ற நாடுகள் விதித்த பொருளாதார தடையானது, பெரியளவில் ரஷ்யாவினை பாதிக்காது.
சீன நிறுவனங்களுக்கு அனுமதி
ஏற்கனவே பல சீன நிறுவனங்களுக்கு சீன கரன்சியில் நிலக்கரியினை வாங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இது இரும்பு உற்பத்தி மற்றும் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியினை யுவானில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகளுக்கு மத்தியில் இப்படி ஒரு நடவடிக்கையினை பின்பற்றியுள்ளது.
யுவானின் ஆதிக்கம்
சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் மதிப்பு நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இதற்கு மாற்றாக சீனாவின் யுவான் மாறிக் கொண்டுள்ளது. யுவானில் சீனா மட்டுமே ஆதிக்கம் செலுத்தினாலும், இந்த நெருக்கடியான சூழலை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்திக் கொண்டு வருகின்றது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications