சீனாவை விட்டு ஓடும் நிறுவனங்கள்.. இனி யாருக்கு 'அந்த' மகுடம்..?! இந்தியாவுக்கு கிடைக்குமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றும் உலகின் பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து வருகின்றன. ஆனால் இந்த உலகிற்கு கொரோனாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் சீனாவோ, எவ்வித பதற்றமும் இல்லாமல் கூலாக இருந்து வருகின்றது.

China-வின் மகுடம் India-வுக்கு கிடைக்குமா? | Oneindia Tamil
 

மேலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி கண்டு வரும் டிராகன் தேசம், உலகின் தொழிற்சாலையாகவும் (World's Factory) இருந்து வருகின்றது.

பலரும் சீனா தற்போது கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுள்ளது. விரைவில் சர்வதேச பொருளாதாரத்தில் முதல் நாடாக மாறும் என்ற கருத்துகளும் இருந்து வருகின்றன.

சீனா உலகின் தொழிற்சாலையா?

சீனா உலகின் தொழிற்சாலையா?

ஆனால் கொரோனாவிற்கு பிறகு பல நாடுகளின் தொழிற்சாலைகளும் சீனாவில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இன்னும் ஐந்து வருடங்களில் சீனா உலகின் தொழிற்சாலை என்ற பெயரை இழக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் உற்பத்தி தொழிற்சாலை, வேறு விதத்தில் வித்தியாசமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கை குறைந்து வருகின்றது?

நம்பிக்கை குறைந்து வருகின்றது?

இது குறித்து UBS நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில், 20 - 30% நிறுவனங்கள் சீனாவினை விட்டு வெளியேறக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது. ஏனெனில் சீனாவின் மீதான நம்பிக்கைகள் குறைந்து வருகின்றனவாம். ஆக இந்த நம்பிக்கையில்லா நிலை என்பது அதன் இருண்ட காலம் எனலாம்.

இதெல்லாம் தான் காரணம்
 

இதெல்லாம் தான் காரணம்

இன்றும் உலகினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, பல நாடுகளுடனான அரசியல் பதற்றங்கள், அண்டை நாடுகளிலும் தென் சீனக் கடலிலும் ஆக்கிரமிப்பு, அதிக கட்டண விகிதங்கள், இன பாகுப்பாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளைப் தவறாகப் பயன்படுத்துதல் என பல காரணங்கள், உலக நாடுகளின் தொழிற்சாலைகள் சீனாவில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களாக உள்ளன.

பல்வேறு நாடுகளுடன் மோதல்

பல்வேறு நாடுகளுடன் மோதல்

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் தொடர்ந்து சீனா மோதல்களைக் கொண்டுள்ளது. இதே அமெரிக்காவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை. இப்படி பல நாடுகளிலும் எதிர்ப்புகளையே தொடர்ந்து சம்பாதித்து வருகின்றது. ஆக தற்போதே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல மாற்றங்களை கண்டுள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து இது இன்னும் பல மாற்றங்களைக் காணும்.

சீனாவின் உற்பத்தி மதிப்பு

சீனாவின் உற்பத்தி மதிப்பு

அமெரிக்கர்கள் முன்பு போட்டியாளர்களாக பார்த்த சீனர்களை, தற்போது எதிரிகளாக பார்க்கின்றனர். ஆக இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் உற்பத்தி தொழிற்சாலை என்பது வித்தியாசமாக இருக்கும். தற்போது சீனாவின் உற்பத்தி மதிப்பு 4 டிரில்லியன் டாலராகும். இது இன்றைய தேதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.

மிகப்பெரிய ஏற்றுமதியாளார்

மிகப்பெரிய ஏற்றுமதியாளார்

சீனாவின் மொத்த உற்பத்தி விகிதம் உலகளாவிய உற்பத்தி விகிதத்தில் 30% ஆகும். இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சமமானதாகும். கடந்த 2020 - 21ம் ஆண்டு நிலவரப்படி சீனா மிகப்பெரிய ஏற்றுமதியாளராகும். அதே நேரம் அமெரிக்கா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விதிகளின்படி, இதனை சீரமைப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாகவும் உள்ளது.

சாம்சங்கின் வெளியேற்றம்

சாம்சங்கின் வெளியேற்றம்

சர்வதேச ஏற்றுமதியில் 13% மற்றும் சர்வதேச சந்தை மூலதனத்தின் 18% சீனாவுக்கு உள்ளது. அதோடு சர்வதேச அளவில் சீனா சிறந்த விநியோக சங்கிலியையும் கொண்டுள்ளது. இது யாரும் சீனாவுக்கு அருகில் வர முடியாது என்ற அளவில் உள்ளது. இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு சீனாவில் உள்ள தனது கடைசி ஆலையை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மூடியது.

வியட்நாம் & நொய்டா உற்பத்தி விகிதம்

வியட்நாம் & நொய்டா உற்பத்தி விகிதம்

ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவெனில் சீனாவில் ஆலைகள் மூடப்பட்ட அதே நேரத்தில், வியட்நாம் மற்றும் இந்தியாவில் புதிய ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் தொலைபேசிகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் வியட்நாம் பாதிக்கும் மேலாகவும், நொய்டாவில் ஆண்டுக்கு 120 மில்லியன் போன்களை உற்பத்தி செய்யும் திறனும் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி

இந்தியாவில் உள்ள இந்த சாம்சங் உற்பத்தி ஆலை உலகின் மிகப்பெரிய ஆலையாகவும் உள்ளது. இது சீனாவில் இருந்ததை காட்டிலும் பெரியது. இந்திய உற்பத்தி வரலாற்றில் இதுபோன்ற உற்பத்தி ஆலை, இந்தியாவுக்கு வந்துள்ளது மறக்க முடியாத ஒன்று. இது விரைவில் சாம்சங் ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இருந்து வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்காக உற்பத்தி

ஆப்பிள் நிறுவனத்திற்காக உற்பத்தி

இது தவிர க்ளோசர் ஹோம், ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆப்பிளின் புதிய பயனாளிகள். ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியாவில் பிஎல்ஐ திட்டத்தின் மூலம் இந்தியாவில் உற்பத்தியை செய்து வருகின்றது.

சீன நிறுவனங்கள் மீது நம்பிக்கையிழப்பு

சீன நிறுவனங்கள் மீது நம்பிக்கையிழப்பு

ஹூவாய் நிறுவனம் சீனாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இன்று உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு 5ஜி சம்பந்தமான பொருட்கள், ஸ்மார்ட்போன் உற்பத்தி என பல பொருட்களையும் உற்பத்தி செய்து வரும் நிறுவனம். இது சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்ப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்த நிறுவனம் வணிக ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மறுக்க முடியாத ஒன்று தான்

மறுக்க முடியாத ஒன்று தான்

இது தவிர ஹீவாயினை இன்னும் சில நாடுகளும் தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இப்படி சீனாவின் பல நிறுவனங்களும், பல விதங்களில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.

ஆக இப்படி, ஒவ்வொரு விஷயமும் சீனாவுக்கு எதிராக உள்ள நிலையில், இந்த ஆய்வு உண்மையாகலாம் என்பதை மறுக்க முடியாத ஒன்றாகத் தான் உள்ளது. இதெல்லாவற்றிற்கும் பிறகு அடுத்ததாக எழுந்துள்ள ஒரே கேள்வி, சீனா உலகின் தொழிற்சாலை இல்லை என்றால், அந்த இடத்திற்கு அடுத்து வரப்போகும் நாடு எது? இந்தியாவா? அப்படி இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china india சீனா
English summary

China is losing factories at an astonishing pace, who will take its place?

China updates.. China is losing factories at an astonishing pace, who will take its place?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X