சீனா அனைத்து துறையிலும் முன்னோடியாக இருக்கும் வேளையில் ஒரு சில துறையில் மட்டுமே பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் உள்ளது. இதில் முக்கியமான ஒன்று விண்வெளி பயணம், விண்வெளி ஆராய்ச்சி. இத்துறையில் எப்படியாவது சரித்திரத்தைப் படைக்க வேண்டும் என்ற மாபெரும் கனவுடன் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது.
உலகிலேயே யாரும் செய்திடாத வகையில் சீனா, நிலவில் பேஸ் அமைத்து 2030க்குள் மனிதர்களை தரையிறங்கச் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த மாபெரும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் சீனா நிலவில் இருக்கும் மண்ணைப் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட செங்கற்களை எடுத்துச் செல்லும் கார்கோ ராக்கெட்டை அடுத்ததாக ஏவ திட்டமிட்டுள்ளது.

இது 2035 ஆம் ஆண்டுக்குள் நிலவில் நிரந்தரமாக பேஸ்மென்ட்-ஐ அமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக நிலவில் இருக்கும் மண் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட செங்கல்லைப் பூமியில் கொண்டு செல்ல உள்ளது.
நிலவின் கடுமையான சூழ்நிலை இருக்கும் அதாவது அதீத வெப்பநிலை மாற்றங்கள், கதிர்வீச்சு மற்றும் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் கட்டங்களைக் கட்டுவது என்பது பெரும் சவாலான காரியம். இதைத் தான் சீனா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்காக பூமியிலிருந்து கட்டுமான பொருட்களை நிலவுக்குக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் அதில் வெற்றி அடையப் பல முறை விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்காக அதிகப்படியான தொகையைச் செலவு செய்யத் தயாராகியுள்ளது ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு.
வூஹானில் உள்ள Huazhong University of Science and Technology கல்லூரியின் விஞ்ஞானிகள் நிலவில் இருக்கும் மண், பூமியில் கிடைக்கும் பாசால்ட் (Basalt) தாது போன்று இருப்பதாகவும் இதை வைத்து தற்போது செங்கல் புரோட்டோடைப்-ஐ உருவாக்கியுள்ளனர்.
இந்த செங்கற்கள் நிலவில் பயன்படுத்த அதன் கடுமையான சூழ்நிலைகளில் எதிர்கொள்ளுமா என்பதை விண்வெளியில் சோதனை செய்ய உள்ளது. இதை அடுத்தடுத்த நிலவுக்கான பயணத்தில் மேற்கொள்ளும்.
நிலாவில் வெப்பநிலை 180°C (356°F) முதல் -190°C (-310°F) வரை மாறுபடும், இதை பாசால்ட் மூலம் உருவாக்கப்பட்ட செங்கல் தாங்குமான என்பது தான் தற்போது டிரில்லியன் டாலர் கேள்வி. இதேபோல் நிலவில் வளிமண்டலம் இல்லாத காரணத்தால் அதிகப்படியான கதிர்வீச்சு இருக்கும், இதேபோல் நிலவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதால் இதையும் இந்த பாசால்ட் செங்கல் எதிர்கொண்டு நிலைத்திருக்குமா என்பது சோதனைக்குப் பின்பு தெரியும்.
இந்த சோதனை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும், ஆண்டுதோறும் சோதனையில் உட்படுத்தப்பட்ட மாதிரிகள் பூமிக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு உள்ளது.
சீனா கடந்த 5 முறை நிலாவுக்குச் செய்த பயணத்தில் சேகரித்த மாதிரிகளின் அடிப்படையில் தான் இந்த பாசால்ட் செங்கல் செய்துள்ளது. இதேபோல் நிலவில் கட்டுமானத்திற்காகச் சீனா Lunar Spider என்ற 3டி பிரின்டிங் ரோபோ-வை உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications