சீன நிறுவனங்களுக்கு கடிவாளம்.. அச்சத்தில் நிறுவனங்கள்.. என்ன பிரச்சனை..!

சமீபத்திய காலமாக சீனா தனது சொந்த நாட்டு நிறுவனங்களுக்கான விதிமுறைகளை கூட கடுமையாக்கி வருகின்றது. குறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இது ஒரு புறம் சீன நிறுவனங்களை நெறிப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டாலும், இதனால் சீனாவின் பல நிறுவனங்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சீன நிறுவனங்கள் மீது மட்டும் பல்வேறு நிறுவனங்கள் சார்ந்த கொள்கைகளிலும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் காரணமாக சீனா நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.

திவால் நிலை

திவால் நிலை

குறிப்பாக சீனா கடந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் தொடர்பான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் குறித்து புதியவிதிமுறைகளைக் கொண்டு வந்தது. இதன் காரணமாக சீனாவின் மிகப்பெரிய, ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய நிறுவனமான எவர் கிராண்டே திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.

அமெரிக்க சந்தையில் தடை

அமெரிக்க சந்தையில் தடை

இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், அமெரிக்க சீன பிரச்சனைகளுக்கு இடையிலும், பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்க பங்கு சந்தையில் தடை விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சீன நிறுவனங்கள் மட்டும் அல்ல, பல்வேறு முதலீட்டாளர்களும் நஷ்டத்தினை எதிர்கொண்டனர்.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்


இதற்கிடையில் தான் வெளி நாட்டு பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை காண்கானிக்கும் விதமாக, சீனாவின் செக்யூரிட்டி கண்கானிப்பு குழுமம் கடுமையான விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இது சீன நிறுவனங்களை மேம்படுத்தும் என்று சீன செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன் (CSRC) தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு கடிவாளம்

தனியார் நிறுவனங்களுக்கு கடிவாளம்

இந்த விதிகள் எந்தளவுக்கு கடினமானதாக இருக்கும் என அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த விதிகள் நிறுவனங்கள் பட்டியிலிடுவதை முழுமையாக தடுக்கவில்லை. எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜின்பிங் அரசு கடுமையாக நடவடிக்கைகளை எடுத்தது. இது தனியார் நிறுவனங்களுக்கு கடிவாளத்தினை போட்டது எனலாம்.

முதலீடுகள் குறையுமா?

முதலீடுகள் குறையுமா?

இது மீடியா மற்றும் தொலைத் தொடர்பு துறை போன்ற முக்கியமான தொழில்களில், வெளிநாட்டு முதலீட்டை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சீன நிறுவனங்களுக்கு இது மீண்டுமொரு கடிவாளமா? இதனால் அன்னிய முதலீடுகள் குறையுமா? அப்படி என்ன விதிகளைத் தான் கொண்டு வரப்போகிறது சீனா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+