சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் அரிய உலோகம் தாது மற்றும் காந்தம் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது என்பது எல்லோருக்கும் தெரியும். சீனா இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு டிரம்ப் அரசு சீனா மீது வரி விதிக்க முடியாமல் சிக்கவைத்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீன அரசின் புதிய அறிவிப்பு அரிய உலோகம் தொடர்பான உலகளாவிய வர்த்தகத்தையும், சப்ளை செயினையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இந்த அறிவிப்பு மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இது நாள் வரையில் சீனா அரசு அரிய உலோக தாது மற்றும் காந்தம் ஆகியவற்றுக்கு தான் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. ஆனால் புதிய அறிவிப்பில் அரிய உலோகம் தயாரிப்பதற்கான, பிராசஸ் செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பம், கருவிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து, இதன் உலகளாவிய வர்த்தகத்தை தனது கட்டப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளின் முதல் படியை எடுத்து வைத்துள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த அரிய உலோக காந்தம் மற்றும் பொருட்கள் எலக்ட்ரிக் கார், விமான இன்ஜின் முதல் ராணவத்தில் பயன்படுத்தும் ரேடார், மருத்துவ உபகரணங்கள் வரையில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த அரிய உலோகத்தின் உலகளாவிய சரங்க உற்பத்தியில் சுமார் 60 சதவீதமும், பிராசசிங் மற்றும் காந்த உற்பத்தியில் 90 சதவீதமும் சீனா பங்கு வகிக்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இதன் தொழில்நுட்பம், கருவிகள் ஆகியவற்றை பெற வேண்டுமாயின் சீன அரசிடம் வெளிநாட்டு அரசுகள் அல்லது நிறுவனங்கள் முறையாக விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்பே விற்கப்படும் என புதிய அறிவிப்பில் சீன அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் சீன காமர்ஸ் அமைச்சகம் இந்த அறிவிப்பில் பிற நாடுகளின் பாதுக்காப்பு மற்றும் செமிகண்டக்டர் துறைக்கான அரிய உலோக காந்தம் ஏற்றுமதியும் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதோடு கூடுதலாக சில காந்தங்கள் மீதும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரு அறிவிப்பு அமெரிக்க அரசை கோபப்படுத்தலாம் என்பதால் சீனா மீது இதுவரையில் விதிக்கப்படாத வரியை இப்போது விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவுக்கு போதுமான அரிய உலோகத்தால் செய்யப்பட்ட காந்தம் தட்டுப்பாடு நிலவும் வேளையில், இப்புதிய அறிவிப்பு பிற நாடுகளையும் இத்துறையில் வளரவிடாமல் செய்வது போல் உள்ளது.சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் மீதான புதிய தடை சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications