பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா கடந்த சில வருடங்களாக உள்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, ஏற்றுமதி சரிவு, தொழிற்சாலைகள் முடக்கம் எனப் பல விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 2 வருட காலத்தில் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியை அடைந்து ஆசிய சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்து வருகிறது.
இந்நிலையில் சீனா தனது விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டுக்குள் இந்நாட்டில் 500க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
சீனா
2020ஆம் ஆண்டுக்குள் சீனாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றும், இதில் 50 சதவீதம் சீனாவின் 5 முக்கியச் சுற்றுலா பகுதிகளை இணைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று சீன நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
விமானம் மற்றும் ஹெலிககாப்டர்
அதேபோல் அரசு தரப்பில் விமானங்களின் எண்ணிக்கையை 5,000க்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றும், இதில் ஹெலிககாப்டர் மற்றும் பிரைவெட் ஜெட்களும் அடக்கம். இத்திட்டமும் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது சீனா.
விமானப் பயணக்காலம்
இத்திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் சீனாவில் விமானப் பயணக் காலம் ஒரு வருடத்திற்கு 20 லட்சம் மணிநேரமாக உயரும் எனச் சீனா டெய்லி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இதன் அளவு 7,32,000 மணிநேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
723.8 பில்லியன் டாலர்
சீன அரசு தற்போது அறிவித்துள்ள 2 இத்திட்டங்களுக்கு அடுத்த 3 வருடத்தில் சுமார் 723.8 பில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிதி பெரும் அளவில் விமான நிலையங்களை அமைப்பதற்காக அமைக்கப்பட்டாலும், கணிசமான தொகை உள்கட்டமைப்புக்குப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
303 திட்டங்கள்
சீன அரசு இந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர் வடிகால், விமான நிலையங்கள் என 303 திட்டங்களை அறிவித்துள்ளது.
இதில் 131 திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவன முதலீடுகள்
மேலும் சீன அரசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களிலும் தனியார் நிறுவனம் மற்றும் தனிநபர் முதலீடுகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
சீன பொருளாதாரம்
சீனா நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி எப்போதும் இல்லாத வகையில் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளது.
நிறுவன கையகப்படுத்தல்
2016ஆம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் அமெரிக்கா-வை விடவும் சீனா அதிகளவில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை நிறுவனங்களைக் கையகப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
5 மாதம்.. 110.8 பில்லியன் டாலர்..
2016ஆம் ஆண்டில் சீனா 110.8 பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களை முடிந்துள்ளது. இது 2015ஆம் ஆண்டு முழுவதும் சீனா செய்த மொத்த டீலின் மதிப்பே 106.8 பில்லியன் டாலர் தான்.
வர்த்தகம்
இதன் மூலம் மறைமுகமாகச் சீன நிறுவனம் வெளிநாட்டு வர்த்தகத்தின் வாயிலாகச் சீன நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, சேவை, நாணய இருப்பு, பொருளாதாரம் என அனைத்தும் அதிகரிக்கும்.
17 டீல்கள்
கடந்த 5 மாதங்களில் சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கும் அல்லது பங்கு கைப்பற்றும் விதிமாக 1 பில்லியன் டாலர் வீதம் சுமார் 17 டீல்கள் செய்துள்ளது. எஞ்சியுள்ள டீல்கள் அனைத்தும் 1 பில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புடையது.
சுவிஸ்
இதில் முக்கியமானது, சீன நாட்டின் தேசிய கெமிக்கல் நிறுவனம் சைன்ஜென்டா என்ற சுவிஸ் உரம் மற்றும் விதை நிறுவனத்தை 43 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

இனி ஏர்போர்ட்ல பல நூறு தேவையில்லை! வெறும் ரூ10-க்கு டீ.. ரூ20-க்கு சமோசா! உடான் யாத்ரி கஃபே அதிரடி!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications