சீனா: உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுவிட்டது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்து வருகிறது. இது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களுக்கு நிதியுதவி: உலகின் உற்பத்தி மையமாக சீனா தான் கருதப்படுகிறது. அங்கே வேலை செய்யக்கூடிய வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, அதே வேலையில் குழந்தை பிறப்பு விகிதமும் குறைகிறது. இது எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சீன அரசு தொடர்ந்து கவலையை தெரிவித்து வருகிறது. எனவே சீன அரசாங்கம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.42,000 நிதியுதவி: சீன அரசு இதற்கான ஒரு சட்ட வரைவை விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த சட்ட வரைவின் படி 2025ஆம் ஆண்டு ஜனவரி 1க்கு பின்னர் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சீன அரசு சார்பாக ஓராண்டுக்கு 3600 யுவான்கள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை 3 வயதை எட்டும் வரை ஆண்டுதோறும் 3600 யுவான்கள் வழங்கப்படும் இந்திய ரூபாயின் மதிப்பில் 3600 யுவான்கள் என்பது 42 ஆயிரம் ரூபாய் ஆகும். கூடிய விரைவில் இந்த திட்டத்தை சீன அரசாங்கம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இளம் தம்பதிகளை ஈர்க்க திட்டம்: சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் என்பது கடந்த ஆண்டு 9.54 மில்லியனாக சுருங்கியது . 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதியாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது . சீன அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு குழந்தை சட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இருந்தாலும் பெரும்பாலும் இளம் தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை . இதற்கு பொருளாதார சூழல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன . மேலும் செட்டிலாகிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது.

ரூ.12 லட்சம் வழங்கும் மாநிலம்: இந்த சூழலில் தான் சீனா அரசாங்கமும் சீனாவை சேர்ந்த பல்வேறு மாநில அரசாங்கங்களும் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்க நிதியுதவி வழங்குவது உள்ளிட பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. இன்னர் மங்கோலியா பகுதியில் இருக்கக்கூடிய ஹோஹாட் பகுதி அரசாங்கம், இரண்டாவது குழந்தை பெறும் பெண்களுக்குஜ் 50,000 யுவான்களும் மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு 1 லட்சம் யுவான்களும் வழங்குகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் 1 லட்சம் யுவான் என்பது 12 லட்சம் ரூபாய் ஆகும்.
இரண்டாவது குழந்தைக்கு நிதியுதவி: மத்திய சீனாவில் உள்ள தியான்மென் பகுதியில் இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு 6,500 யுவான்கள் வழங்கப்படுகின்றன. குழந்தைக்கு மூன்று வயது ஆகும் வரை மாதம் தோறும் 800 யுவான்களை அரசாங்கம் வழங்குகிறது. இதனால் அந்த பகுதி பெண்கள் மத்தியில் குழந்தை பெற்று கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறதாம்.
தென்கொரியா, ஜப்பானில் வெற்றி: ஏற்கனவே தென்கொரியாவில் குழந்தை பிறக்கும் விகிதத்தை அதிகரிக்க பெண்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட ஓராண்டு காலத்திலேயே அங்கே குழந்தை பிறப்பு விகிதம் என்பது 3.1 சதவீதம் அதிகரித்தது. ஜப்பான் இதே போன்ற ஒரு பாலிசியை தான் பின்பற்றுகிறது . இங்கேயும் இந்த நிதியுதவி திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு குழந்தை பிறக்கும் விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
வேலை நேரம் குறைப்பு: சீன அரசாங்கமும் குழந்தை பிறப்பை அதிகரிக்க நிதியுதவி வழங்கும் முறையை கொண்டு வர உள்ளது. வாழ்க்கை செலவினங்கள், வாழ்க்கை தரம் , பொருளாதாரம் ஆகிய காரணிகளால் தான் பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தையுடனே நிறுத்துகின்றனர். எனவே குழந்தை வளர்ப்புக்கு நிதியுதவி, ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தை குறைப்பது என தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு சீனா திட்டமிட்டிருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications