24 வருடங்களில் முதன்முறையாக சீனாவின் ஆண்டு வளர்ச்சி வகிதம் குறைந்தது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: வல்லரசு நாடான அமெரிக்காவுடன் பொருளாதார ரீதியில் போட்டிப்போடும் சீனா, பொருளாதார வளர்ச்சியில் 24 வருட சரிவை பதிவு செய்துள்ளது.

2014ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக குறைந்து இலக்கை தவறவிட்டுள்ளது மட்டும் அல்லாமல் 24 வருட சரிவை பதிவு செய்யதுள்ளதாகவும் இந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக விளங்கும் சீனா அடுத்த ஆண்டுகளில் இலக்கை அடைய போராட வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது என சீனாவின் முன்னணி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இலக்கு

இலக்கு

சீன அரசின் 7.5 சதவீத வளர்ச்சி இலக்கில் 0.1% குறைந்து 7.4 சதவீதம் பதிவு செய்துள்ளது. எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், நாணயம் மற்றும் வளர்ச்சி நிலையில் இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி பாதிப்பு Q

வளர்ச்சி பாதிப்பு Q

2014ஆம் ஆண்டின் வளர்ச்சியில் ஏற்ப்பட்ட சரிவிற்கு முக்கிய காரணமாக கட்டமைப்பு துறை மந்த நிலையில், உள்நாட்டு தேவையின் அளவு குறைவு, உலக நாடுகளின் பொருளாதார நிலை ஆகியவை சீனாவை அதிகளவில் பாதித்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த இத்துறைகள் தீவிர கண்காணிப்பில் வைக்க இந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

7. 7 சதவீத வளர்ச்சி

7. 7 சதவீத வளர்ச்சி

2013ஆம் ஆண்டில் இந்நாட்டின் வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் 20 வருடங்களுக்கு முன் சீனா இரண்டு இலக்க வளர்ச்சியை பதிவு செய்து, பொருளாதார நாடுகளின் பட்டியில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இருந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது சீனா.

ஜிடிபி

ஜிடிபி

2014ஆம் ஆண்டில், சீனாவின் ஜிடிபி 63.65 டிரில்லியன் யுவான் ஆதாவது 10.4 டிரில்லியன் டாலராக இருந்தது. மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 3ஆம் காலாண்டை போலவே 4வது காலாண்டிலும் 7.3 சதவீத்தை பதிவு செய்திருந்தது.

உற்பத்தியில் வளர்ச்சி

உற்பத்தியில் வளர்ச்சி

மேலும் கடந்த நிதியாண்டில் சீன தொழில்துறையின் உற்பத்தி 9.7 சதவீத்தில் இருந்து 8.3 சதவீதமாக குறைந்துள்ளது, முதலீட்டின் அளவும் 15.7 சதவீதம் குறைந்ததாக அரசு பத்திரிக்கை நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

சில்லறை விற்பனை

சில்லறை விற்பனை

இந்தியாவை போல் சீனாவிலும் சில்லறை விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது, இதன் மூலம் இந்நாட்டின் வர்த்தகத்தின் அளவு 26.24 டிரில்லியன் யுவான் என்ற அளவை எட்டியுள்ளது.

தலைவர்கள் மாநாடு

தலைவர்கள் மாநாடு

மேலும் நாட்டின் வளர்ச்சி சரிவை மீட்டெடுக்க சீனாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் இணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் 9 துறைகளை கண்டறிந்துள்ளனர்.

தொழில் பூங்காக்களை

தொழில் பூங்காக்களை

மேலும் நாட்டின் வர்த்தகத்தை ஊக்குவிக்க சீனாவின் 3முக்கிய நகரங்களில் தொழில் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது சீனா அரசு.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China posts weakest annual growth in 24 years

China posted an economic growth of 7.4 per cent last year, missing the official target and slumping to a 24-year low, official data showed today amid concerns over continued slowdown of the world’s second-largest economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X