சீன நிறுவனமா இப்படி செய்தது.. போலி பரிவர்த்தனையால் $310 மில்லியன் அபேஷ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தாக்கத்தினை விட தற்போது நடந்து கொண்டுள்ள குழப்பங்களினால் தான் சீனா, பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது எனலாம். ஒரு புறம் சீனா தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்கிறது அமெரிக்கா.

மறுபுறம் உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களை வளைக்க திட்டமிட்டு, சமயம் பார்த்து முதலீடு செய்து வருவதாக, உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதோடு அன்னிய முதலீட்டு விதிகளையும் கடினமாக்கி வருகின்றன.

இதெல்லாம் ஒரு புறம் எனில், மறுபுறம் கடந்த வாரத்தில் அமெரிக்கா பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் சரியான தணிக்கை அறிக்கையினை கொடுப்பதில்லை என அமெரிக்காவின் பங்கு சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது.

பலத்த சோதனை

பலத்த சோதனை

இதற்கிடையில் தற்போது சீனா கட்டுப்பாட்டாளர்களே தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனராம். கடந்த வாரம் அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட லக்கின் காஃபி நிறுவனத்தினை தான் தற்போது சீனா கட்டுபாட்டாளர்கள் விசாரணைக்காக திடீர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனராம். லக்கின் காஃபியின் அலுவலகங்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டபோது முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மெகா மோசடி

மெகா மோசடி

அது மட்டும் அல்ல போலியான பரிவர்த்தனைகள் மூலம் 310 மில்லியன் டாலர் மோசடி செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் பலமாக சரிந்துள்ளதாகவும் பிபிசி செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, சீனாவின் மிகப்பெரிய காஃபி சங்கிலியான ஸ்டார்பக்ஸை முந்திக் கொள்வதாக லக்கின் காஃபி உறுதியளித்தார்.

மாநில நிர்வாகத்தால் ஆய்வு
 

மாநில நிர்வாகத்தால் ஆய்வு

கடந்த 2019ம் ஆண்டில் நாஸ்டாக் பங்கு சந்தையில் சீனாவின் சில வெற்றிகரமான அமெரிக்கா பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த விசாரணை குறித்து லக்கின் காஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தை ஒழுங்குமுறைக்கான மாநில நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

முழுமையான ஒத்துழைப்பு

முழுமையான ஒத்துழைப்பு

அது மட்டும் அல்ல, நிறுவனம் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறியுள்ளது. அதோடு நாடு முழுவதிலும் உள்ள கடைகள் திறந்தே இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் லக்கின் காஃபி அதன் தலைமை இயக்க அதிகாரி மற்றும் சில பணியாளார்களை சஸ்பென்ட் செய்ததாகவும் கூறியுள்ளது.

பங்கு சந்தையில் நிறுத்தம்

பங்கு சந்தையில் நிறுத்தம்

இந்த நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் கடந்த ஏப்ரல் 7 அன்று நாஸ்டாக் பங்கு சந்தையில் நிறுதப்பட்டது. மேலும் கூடுதலாக தேவையான அறிக்கைகளை சமர்பிக்கும் வரையில் பங்கு சந்தையில் நிறுத்தப்படும் நாஸ்டாக் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சீனா கட்டுப்பாட்டாளர்கள் இந்த சோதனையை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China regulators raided the famous china coffee chain and find uncovered $310m in fake transactions.

China's most powerful regulators raided the offices of Luckin Coffee after opening an investigation into the scandal-hit firm, also it revealed that it uncovered $310m in fake transactions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X