அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. மீண்டு வரும் சீனா.. பொருளாதார வளர்ச்சி 3.2%..!

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவின் பொருளாதாரம் சற்று சரிவுடனேயே இருந்து வருகிறது. இதற்கிடையில் மேற்கொண்டு கொரோனாவும் தன் பங்கிற்கு கொஞ்சம், சீனாவில் வேலையை காண்பித்து விட்டு சென்றுள்ளது.

சொல்லப்போனால் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலேயே தனது சுயரூபத்தினை காட்டியது இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன்.

இதனால் கடந்த ஆண்டு இறுதியில் முடங்கிய சீனா, நடப்பு ஆண்டின் தொடக்கத்திலும் பல மாதங்களாக முடங்கி கிடந்தது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கியது எனலாம்.

மீண்டு வரும் பொருளாதாரம்

மீண்டு வரும் பொருளாதாரம்

இதற்கிடையில் எப்படியோ படு இழுபறியாய் இருந்த முதல் கட்ட ஒப்பந்தம், பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்பு போடப்பட்டாலும், இரண்டாவது கட்ட ஒப்பந்தத்திற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனையாக சீனாவுக்கு எதிராக தோன்றி வந்தாலும், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்பதற்கு ஏற்ப பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டு இருக்கிறது.

அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்கும் சீனா

அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்கும் சீனா

அமெரிக்கா மட்டும் அல்ல, தற்போது சீன இந்திய எல்லை பிரச்சனைக்கு பின்பு, இந்தியாவும் சீனாவுக்கு எதிராக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவினை தொடர்ந்து பிரிட்டனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நாடாக இருந்த நிலையில், தற்போது பிரிட்டனும் சீனாவுக்கு செக் வைப்பது போல ஹூவாய் நிறுவனத்தினை டிசம்பரிலிருந்து தடை செய்யப்போவதாக கூறியுள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி

சீனாவின் பொருளாதார வளர்ச்சி

ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் நிச்சயம் வளர்ச்சி காணுவோம். என்பது போல, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 3.2% வளர்ச்சி கண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மீண்டுவரத் தொடங்கிய பொருளாதாரம்

மீண்டுவரத் தொடங்கிய பொருளாதாரம்

கொரோனா லாக்டவுனால் முடங்கிபோன பொருளாதாரம் தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரம் மீண்டு வர பெய்ஜிங் தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் கணிப்பில் வாக்களித்த பொருளாதார நிபுணர்களின் கணிப்பு 2.5% ஆக இருந்தது கவனிக்கதக்கது.

28 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சரிவு

28 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சரிவு

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம், நடப்பு ஆண்டில் பெரும் வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், முதல் காலாண்டில் 6.8% வீழ்ச்சி கண்டது. இது 1992 க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான முதல் சரிவாகும். கிட்டதட்ட 28 ஆண்டில் சீனாவின் முதல் வீழ்ச்சி இதுவேயாகும்.

உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

அண்மையில் வெளியான சீனாவின் தரவுகள் சீனா மீண்டு வருவதையே சுட்டிக் காட்டிக் கொண்டு தான் இருந்தது. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியும் சற்று அதிகரித்துள்ளது. உற்பத்தியும் ஜூன் மாதத்தில் மீண்டு வந்துள்ளதை அந்த தரவில் காண முடிந்தது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

பல சவால்கள் உள்ளது

பல சவால்கள் உள்ளது

இந்த நிலையில் அடுத்த இரண்டு காலாண்டுகளில் சுமார் 5% மீட்கப்படுவது நிச்சயமாக எதிர்பார்க்ககூடியது தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சீனாவின் முழு ஆண்டு மொத்த உற்பத்தி விகிதமானது கடந்த 2019ம் ஆண்டில் 6.1% ஆக இருந்தது. இந்த ஆண்டும் வளர்ச்சி காணும். இருப்பினும் நடப்பு ஆண்டில் பல சவால்கள் உள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் சற்று தாக்கம்

உலகப் பொருளாதாரத்தில் சற்று தாக்கம்

சர்வதேச அளவில் தொற்று நோய்களின் தொடர்ச்சியான பரவல் காரணமாக, உலகப்பொருளாதாரத்தில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பல குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளது. கடந்த ஆண்டில் சீனாவின் நுகர்வு வீழ்ச்சி கண்டுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இதே சில்லறை வர்த்தகம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.8% ஆக குறைந்துள்ளது.

வளர்ச்சி பெறுவோம்

வளர்ச்சி பெறுவோம்

மேலும் வேலை சந்தையில் கவலைகள் மற்றும் திவால் நிலைகளின் பின் தங்கிய தாக்கம், பொருளாதாரம் மீது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு கொண்டு இருக்கிறது. மேலும் உலகளாவிய தேவையின் மெதுவான வளர்ச்சி சீன ஏற்றுமதியை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் இப்படி பல நாடுகள் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியிருந்தாலும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா, நாங்கள் நிச்சயம் வளர்ச்சி பெறுவோம் என்பது போல் உள்ளது சீனாவின் இந்த வளர்ச்சி அறிக்கை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+