சரித்திரம் படைக்கப்போகும் சீனா.. ஆடிப்போன அமெரிக்கா.. 2035க்கு இப்போ திட்டம்போடும் ஜி ஜின்பிங்!

தொழில்நுட்பம், வர்த்தகம், உற்பத்தி, ராணுவ பலம், பொருளாதாரம் என அனைத்திலும் அமெரிக்காவுக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் சீனா அடுத்த நிலைக்கு செல்ல முக்கியமான திட்டத்தை வகுக்க துவங்கியுள்ளது. சொல்லப்போனால் சீனாவின் பெரும் பணக்காரர்கள், முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது இந்த ஓரு விஷயத்தை குறித்து தான் பேசி வருகின்றனர்.

சீன பெரும் தலைகளும், ஜடிபி-யில் சீனா உடன் போட்டி நாடுகள் என பல பிரிவினர் இப்போது பேசும் ஒரே விஷயம் அந்நாட்டின் 15வது ஐந்தாண்டு திட்டம். இந்த திட்டம் தான் சீனாவின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சி, வர்த்தக போக்கு என அனைத்தையும் தீர்மானிக்கும் விஷயமாக உள்ளது.

சரித்திரம் படைக்கப்போகும் சீனா.. ஆடிப்போன அமெரிக்கா.. 2035க்கு இப்போ திட்டம்போடும் ஜி ஜின்பிங்!

சரி இந்த இந்த 15வது ஐந்தாண்டு திட்டம் என்பது 2026 முதல் 2030 வரை நாட்டின் பொருளாதார பாதையை வரைவு திட்டமாகும். இந்த ஐந்தாண்டு திட்டத்தில் என்ன இருக்கும், அமெரிக்கா என்னவோ ஏஐ, டேட்டா சென்டர் உள்நாட்டு உற்பத்தி என பேசி வருகிறது. ஆனால் சீனா இதில் செயற்கை நுண்ணறிவு, ரியல் எஸ்டேட், புவிசார் அரசியல் போன்றவற்றை தாண்டி புதிய இலக்கை நோக்கி பயணிக்க உள்ளது.

சீனா சிறப்பான பொருளாதார நாடு என்றாலும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரசு வெளியிடும் இந்த திட்ட அறிக்கை தான் உண்மையான மாற்றத்தைத் தொடங்கும். இந்த ஆண்டு இத்திட்டம் 2035இல் சீனாவை மிதமான வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற பெரிய இலக்கை நோக்கி இத்திட்டத்தை உருவாக்கப்பட உள்ளது. இந்த இலக்கை அடைய வகுக்கப்படும் திட்டங்கள் தான் புதிய முதலீட்டு வாய்ப்பு ஒழிந்துக்கொண்டு இருக்கிறது.

மார்ச் 2026ல் தான் இந்த 15வது ஐந்தாண்டு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டாலும், அக்டோபர் 28ஆம் தேதி இத்திட்டத்திற்கான கொள்கை மாற்றங்கள், பரிந்துரைகள், கோரிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அமைப்பிடம் முன்வைக்கப்பட்டு உள்ளதால் உலக நாடுகளில் இதுக்குறித்து பேச்சு அடிப்பட்டு வருகிறது.

2035 இலக்கு
சீனா 2035இல் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 25,000 அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்லது. 2025 இறுதியில் இது 14,000 டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை அடைய மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன.

முதலாவது, 2026 முதல் 2030 வரை ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சி தொடர வேண்டும். இரண்டாவது, யுவான் நாணயம் நீண்டகால உயர்வு போக்கில் செல்ல வேண்டும். மூன்றாவது, பெரிய அளவிலான போர் மோதல் இல்லாமல் பொருளாதாரத்தை மட்டுமே கவனிக்க வேண்டும். இந்த மூன்றும் நிறைவேறினால், தொழில், முதலீடு, வெளிநாட்டு நிறுவனங்கள் என அனைத்தும் பெரிய மாற்றத்தை சந்திக்கும்.

3 கட்ட திட்டம்
சீனாவில் தனிநபர் வருமானம் 14000 டாலர் அளவீட்டை எட்ட ஓவர்நைட்டில் திட்டமிடவில்லை. அதாவது 2021 முதல் 2025 வரை நடந்த 14வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் இந்த இலக்கை அடைய அடித்தளம் அமைத்தது. 2026 முதல் 2030 வரை 15வது திட்டம் இலக்கை நோக்கி வேகமாக நகர்த்தும் பணிகளை செய்ய முடிவு செய்துள்ளது. 2031 முதல் 2035 வரை இலக்கை அடைய தடையாக இருக்கும் விஷயங்களை களைந்து இடைவெளிகளை நிரப்பி இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறது சீனா.

இந்த படிப்படியான திட்டமிடல் சீனாவை உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றும். சீனாவில் வியாபாரம் செய்ய விரும்புபவர்கள், முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதல் வர்த்தக சந்தையை புரிந்துக்கொள்வதற்கு பதில் அந்நாட்டு அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு கொள்கை அளவில் மாற்றம் நடக்கிறது, இந்த மாற்றம் தான் முதலீட்டு சந்சையை தீர்மானிக்கும் விஷயமாக உள்ளது.

யுவான் உயர்வு:
15வது திட்டம் வெற்றி பெற்றால் யுவான் நீண்டகால உயர்வு சுழற்சியில் நுழையும். அதாவது யுவான் நாணயத்தை சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக பயன்படுத்த ஊக்குவித்து இதற்கான டிமாண்ட்-ஐ உருவாக்க வேண்டும். இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் சீன சந்தையில் அதிக வாய்ப்பு பெறும். உள்நாட்டு நுகர்வு பெருகும். இந்தியா போன்ற நாடுகளுக்கு சீனாவுடன் வர்த்தகம் செய்ய புதிய வழி திறக்கும். முதலீட்டாளர்கள் இப்போதே இந்த போக்கை கவனிக்க வேண்டும்.

போர் இல்லா பொருளாதாரம்:
ஆண்டுதோறும் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டுமாயின் சீனா பெரிய அளவிலான போர் மோதலை தவிர்த்து பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்து வேண்டும். இது உலக சந்தைக்கு பெரிய நிம்மதியை கட்டாயம் அளிக்கும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் சீனாவுடன் பாதுகாப்பாக வர்த்தகம் செய்யலாம். தொழில்நுட்பம், உற்பத்தி, சேவை துறைகளில் புதிய கூட்டணி உருவாகும்.

முதலீட்டாளர்களுக்கு அடுத்த 10 ஆண்டு ரோட்மேப்
சீனாவின் அடுத்த பத்தாண்டு வாய்ப்புகள் இந்த 15வது திட்டத்தில் உள்ளது. பங்குச் சந்தை மட்டும் பார்க்காதீர்கள். ஐந்தாண்டு திட்டத்தை முழுமையாக புரிந்துக்கொண்டால் ஆசிய சந்தையின் போக்கை எளிதாக கணிக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+