பணத்திற்காக முகத்தை விற்கும் சீன மக்கள்..!! சீனாவில் இப்போ இது தான் டிரெண்டிங் பிஸ்னஸ்..!!

வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சீன மக்களுக்கு ஒரு புதிய மற்றும் விசித்திரமான வருமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனை வைத்து ஒவ்வொரு மக்களும் பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர்.

சீன மக்கள் தங்களது முகத்தோற்றத்தை ஏஐ நாடகங்கள், விளம்பரங்கள், காணொளிகள், விளையாட்டு மற்றும் டிஜிட்டல் கண்டெண்ட்களுக்கு பயன்படுத்த பதிவு செய்து அதற்கான உரிமம் தந்து பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். சீனாவில் இயங்கும் ActID, New Claw, Yuanxiang Xinsheng, Xinzhua போன்ற பிரத்தியேக தளங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

பணத்திற்காக முகத்தை விற்கும் சீன மக்கள்..!! சீனாவில் இப்போ இது தான் டிரெண்டிங் பிஸ்னஸ்..!!

இந்த தளங்களில் மக்கள் தங்களது அடையாளத்தை சரிபார்த்துவிட்டு , முகத்தை பதிவு செய்கிறார்கள். கண்டெண்ட் கிரியேட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த டிஜிட்டல் பட்டியல்களில் இருந்து வயது, பாலினம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் முகங்களை தேடிக்கொள்ளலாம். இதில் girl-next-door போன்ற தோற்றம்), rugged மற்றும் supermodel போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.

பயனர்கள் தங்கள் முகம் எந்தெந்த இடங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் , உதாரணமாக தொலைக்காட்சி விளம்பரங்கள், குறுநாடகங்கள், வீடியோ கேம்கள் போன்றவை என்பதை தாங்களே தீர்மானிக்கலாம். சில பிளாட்ஃபார்ம்களில் பயனர்களே தங்களுக்கான விலையை நிர்ணயித்து, எத்தனை தயாரிப்புகளில் தங்கள் முகம் இடம்பெறலாம் என்பதையும் முடிவு செய்ய முடியும்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய முக லைசென்சிங் தளங்களில் கட்டணங்கள் 50 யுவான் அதாவது சுமார் 700 ரூபாய் முதல் அதிகபட்சமாக 99,999 யுவான் ,தோராயமாக 14 முதல் 15 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த வருமானம் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது லைசென்ஸ் காலம், எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் எத்தனை தயாரிப்புகளில் முகம் இடம்பெறுகிறது என்பதை பொறுத்து மாறுபடும்.

மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ActID தளத்தில் சுமார் 800 பயனர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் தொழில்முறை நடிகர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் நடிப்பு அனுபவம் இல்லாதவர்களும் உள்ளனர். சுமார் 300 பயனர்கள் தங்கள் முகங்களை லைசென்ஸ் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு AI நாடக தயாரிப்புகள் இந்த தளம் மூலம் சுமார் 10 முகங்களை வாங்கியுள்ளன. ஒரு எபிசோடுக்கு 99 யுவான் முதல் 500 யுவான் வரை (1,400 முதல் 7,000 ரூபாய்) கட்டணமாக வழங்கப்படுகிறது. இதில் பிளாட்ஃபார்ம் 10% கமிஷன் பெற்றுக்கொள்கிறது.

செங்டுவைச் சேர்ந்த Xinzhua தளத்தில் சுமார் 370 டிஜிட்டல் முகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேஷனல் பிசினஸ் டெய்லி வெளியிட்ட செய்தியின்படி, ஒரு வங்கி ஊழியர் தனது முகத்தின் உரிமையை ஒரு விளம்பர நிறுவனத்திற்கு 3 நாட்களுக்குள் 7 முறை விற்றதன் மூலம் கிட்டத்தட்ட 35,000 ரூபாய் வரை சம்பாதித்தாராம்.

சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் மைக்ரோடிராமா துறையில் உண்மையான முகங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் வெளியிடப்பட்ட 128,000 மைக்ரோடிராமாக்களில் 95%க்கும் அதிகமானவை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளன.இதில் ஏஐ முகங்களை விட உண்மையான மனிதர்களின் முக அடையாளங்களை பெற்று அதன் மூலம் உருவககப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதாம், எனவே மக்கள் தங்கள் முக அடையாளங்களின் உரிமையை விற்பதன் மூலம், வழக்கமான பணிகளை தொடர்ந்துகொண்டே வருமானமும் ஈட்ட முடிகிறது என இந்நிறுவனங்களை நடத்துவோர் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+