அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

1949ஆம் ஆண்டு சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தைவான் தனித்த அரசாக உருவானது. அதற்கு பிறகு, சீனா தைவானை தனது பகுதியாகவே கருதி வருகிறது. இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவுடன் தைவான் தனி அடையாளத்தைத் தக்கவைத்துள்ளது. இந்த நீண்டகால அரசியல் பதற்றம் தற்போது 2026ஆம் ஆண்டில் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது என்றால் மிகையில்லை.

ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர், அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் ஆகியவை உலக நாடுகளை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் வேளையில், புதிதாக ஒரு போர் துவங்க உள்ளது. ஆம் சீனா - தைவான் மத்தியிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள் சீனா தைவானை கைப்பற்றும் வகையில் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர்..?!

சீனாவின் மாபெரும் இலக்கு
சீன மக்கள் விடுதலைப் படை (PLA) 2027க்குள் தைவானை சீனா உடந் இணைக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இதன் அடிப்படையில், 2026 ஆண்டில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் ஆண்டாக இருக்கும் காரணத்தால் தற்போது 2026ஐ Year of Temptation என பார்க்கப்படுகிறது. உலக அரசியல் சூழ்நிலைகளும் இதற்கு சாதகமாக உள்ளது என்பது தான் வருத்தும் அளிக்கும் விஷயமாக உள்ளது.

அமெரிக்கா தனது ஈரானுடன் போரில் ஈடுபட்டிருப்பதும், உலக நாடுகள் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதில் கவனம் செலுத்துவதும், சீனாவுக்கு இந்த நேரத்தை முக்கியமாக மாற்றியுள்ளது.

நேரடி போர் இருக்காது.. ஏன்?
சீனா நேரடி ராணுவ தாக்குதலை மேற்கொண்டால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனா மீது பொருளாதார தடைகள் விதிக்கும் அபாயம் உள்ளது. ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகள் சீனாவுக்கு விதிக்கப்பட்டால், சீனாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தாக முடியும்.

மேலும், தைவான் உலக செமிகண்டக்டர் சிப் உற்பத்தியின் முக்கிய நாடாக உள்ளது. போர் காரணமாக சிப் சப்ளை நிறுத்தப்பட்டாலோ அல்லது உற்பத்தி தளம் பாதிக்கப்பட்டாலோ சீனாவின் மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர்..?!

'அனகொண்டா' தந்திரம்
இந்த சூழ்நிலையில் தான், சீனா நேரடி தாக்குதலை விட 'அனகொண்டா' (Anaconda Strategy) தந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனகோண்டா பாம்பு போல மெதுவாக எதிரியை உடலோடு சுற்றி நெருக்கி மூச்சு முட்ட செய்து செயலிழக்க செய்வது போல் சீனா தைவானுக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி நெருக்கிடிக்கு தள்ளுகிறது.

சீனா தைவானின் வான்வழி பாதுகாப்பு எல்லையை தாண்டி வேண்டுமென ஏவுகணைகளை ஏவி பயம்புறுத்துவது, சீன கடற்படையை தீவு நாடான தைவான்-ஐ சுற்றி நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சீனா தனது போர்படை சக்தியை தொடர்ந்து தைவானுக்கு காட்டி வருகிறது. இது நேரடி தாக்குதல் இல்லாமல், உளவியல் மற்றும் ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

உலக சந்தைகளுக்கு தாக்கம் என்ன?
தைவான் செமிகண்டக்டர் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், தைவான் உடன் சீனா எத்தகைய மோதல், தாக்குதல் செய்தாலும் உலகளாவிய செமிகண்டக்டர் சிப் சப்ளை செயினை பாதிக்கும். குறிப்பாக, AI மற்றும் மின்னணு துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர்..?!

அமெரிக்காவுக்கு நெருக்கடி
இந்திய பங்குச்சந்தைகள் ஈரான் போர் காரணமாக சென்செக்ஸ் 13% வரை சரிவை சந்தித்துள்ள நிலையில், நேரடியாக போரில் ஈடுப்பட்டுள்ள அமெரிக்க சந்தைகள் வெறும் 4% மட்டுமே சரிந்துள்ளன. ஆனால், சீனா-தைவான் மோதல் தீவிரமடைந்தால், அமெரிக்க சந்தைகளில் இந்திய சந்தையை காட்டிலும் அதிமாக வீழ்ச்சி அடையும்.

காரணம் தைவான் நாட்டின் சிப்-ஐ நம்பிதான் அமெரிக்காவின் ஆப்பிள், கூகுள், டெஸ்லா போன்ற பெரு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஏஐ துறையும் உள்ளது. ஏஐ துறை, டேட்டா சென்டர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கம்பியூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன் உட்பட அமெரிக்காவுக்கு தேவையான அனைத்து சிப்-களும் தைவானில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிவையில் சீனா தைவானை காப்பற்றினால் இது அமெரிக்காவுக்கு தான் முதலில் மூச்சு முட்டும், சீனா 2ஆம் நிலை பாதிப்பை தான் வர்த்தக தடைகள் மூலம் எதிர்கொள்ளும். இதேபோல் அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கிரீன்லாந்து விவகாரம் வாயிலாக முரண்பாடு ஏற்பட்ட காரணத்தால் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தைவான் மீது சீனா போர் தொடுத்தால் ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்குமான என்பது பெரும் கேள்வி தான்.

இதேபோல் சீனா தயாரிப்புகளை நம்பி தான் உலகின் பெரும்பாலான நாடுகள் (அமெரிக்கா உட்பட) இருக்கும் காரணத்தால் டிரம்ப் உடன் சேர்ந்து சீனா மீது தடைவிதிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

இதன் மூலம் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம் ஒரு நேரடி போரை விட அதிக ஆபத்தானதாக தெரிகிறது. இது மெதுவாக உலக பொருளாதாரத்தை பாதிக்கும் சக்தி கொண்டதால் 2026ல் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது.

2026ல் சீனா தைவான் நாட்டை தாக்குமா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+