கடன் நெருக்கடி.. சீனா பில்லியனர் Hui ka-வின் சொத்துமதிப்பு 93% சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசியாவிலேயே சிறந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள சீனாவின் கோடீஸ்வரராக வலம் வந்த ஹூய் கா யானின் சொத்து மதிப்பு, ஒரே ஆண்டில் 93% சரிவினைக் கண்டுள்ளது. கடன் நெருக்கடியால் அவர் ஒரே ஆண்டில் 3.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளார்.

ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தவர் ஹூய் கா யான், இவர் சீனாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான 42 பில்லியன் மதிப்புடன் இருந்த எவர் கிராண்டின் தலைவர் ஆக இருந்தவர். அவரது சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக குறைந்துள்ளது

அமெரிக்க கோடீஸ்வரர்கள் வரி செலுத்துவதை எவ்வாறு தவிர்க்கிறார்கள் தெரியுமா? அமெரிக்க கோடீஸ்வரர்கள் வரி செலுத்துவதை எவ்வாறு தவிர்க்கிறார்கள் தெரியுமா?

மோசமான கடன் நெருக்கடி

மோசமான கடன் நெருக்கடி

கடந்த 2021ம் ஆண்டில் எவர் கிராண்டே நிறுவனம், மோசமான கடன் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பெரும் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஹூய் கா தள்ளப்பட்டார். அதன் பிறகு கடனை அடைப்பதற்காக, தனது சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

மிகப்பெரிய டெவலப்பர்

மிகப்பெரிய டெவலப்பர்

300 பில்லியன் டாலர் கடனுடன் இருந்த ஹூய் கா, நாட்டின் மிகப்பெரிய டெவலப்பராக ஒரு காலத்தில் இருந்தவர். சீனாவின் மிக முக்கிய வணிகமாக இருந்து வந்த ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 2021ம் ஆண்டு மிக மோசமான சரிவினைக் கண்டது. அந்த காலக்கட்டத்தில் எவர்கிராண்டே உட்பட பல் டெவலப்பர்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கடனை வசூலிக்க முடியாமல் தவிப்பு

கடனை வசூலிக்க முடியாமல் தவிப்பு

இதனால் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் ஆட்டம் கண்டன. இத்தகைய மோசமான நிலைக்கு மத்தியில் தான் ஹுய் கா கடனை அடைக்க தனது வீடு மற்றும் தனி விமானம் உள்ளிட்டவற்றையெல்லாம் விற்பனை செய்தார். இதன் மூலம் கடனை அடைக்க முற்பட்டார்.

சீனாவில் தாக்கம்

சீனாவில் தாக்கம்

எவர்கிராண்டே நிறுவனத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், இதன் விற்பனையானது 2020ல் 110 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதன் பிறகு 2021ல் ஆரம்பித்த பிரச்சனையானது மிக மோசமாக சீனாவில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 280 நகரங்களில் 1300 டெவலப்பமெண்ட்டுகளை கொண்டிருந்தது. எனினும் நிறுவனம் கடனை திரும்ப செலுத்தவில்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு கடன் மறுசீரமைப்பையும் தவறிவிட்டது.

பல பிரச்சனைகள்

பல பிரச்சனைகள்

சீன நிறுவனங்கள் பலவும் அரசியல் ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தன. அந்த காலகட்டத்திலும் ஹூய் பல முக்கிய பதவிகளை வகித்தவர் என்றாலும், எவர்கிராண்டேவின் கடன் பிரச்சனையானது உலகம் முழுக்க பரவியது. குறிப்பாக சீனாவின் மிக முக்கிய கெளரவ பதவிகளில் ஒன்று CPPCC குழுவில் இருப்பது. ஆனால் ஹூய் இதிலிருந்தே விலகப்பட்டார். வருடாந்திர கூட்டங்களில் தவிர்க்கப்பட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஒதுக்கி வைப்பட்டார். இது மேற்கொண்டு இவரின் சரிவுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

2023 முக்கியமான ஆண்டு

2023 முக்கியமான ஆண்டு

மொத்தத்தில் 2023 என்பது மிக முக்கியமான ஒரு ஆண்டாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு ஆண்டில் ஆவது ஏதேனும் சாத்தியமான வழிகளை எவர்கிராண்டே கண்டுபிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எங்கள் பணிகளை எங்களால் முடிக்க முடியும். கடனையும் திரும்ப செலுத்த முடியும். பிரச்சனைகளை அகற்ற முடியும் என நான் நம்புகிறேன். எங்கள் கட்டுமானம், விற்பனை மற்றும் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதை நாங்கள் ஒரு போதும் கைவிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார்..

பணக்காரர்கள் இழப்பு

பணக்காரர்கள் இழப்பு

ஹூய் கா மட்டும் அல்ல, ப்ளும்பெர்க் பில்லியனர் பட்டியலில் சீனாவின் மேற்கோண்டு 5 பில்லியனர்களும் தங்களது சொத்து மதிப்பில் சுமார் 65 பில்லியன் டாலர்கள் இழப்பினை கண்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china சீனா
English summary

China's billionaire Hui ka yan loses 93 percent of his total wealth

China's billionaire Hui ka yan loses 93 percent of his total wealth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X