உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடாகச் சீனா முன்னேறியுள்ளது, பல துறையில் டெக்னாலஜி மற்றும் உற்பத்தியிலும் முன்னோடியாக இருக்கும் இந்த வேளையில், சீனா முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.
ஆம் சீனாவில் கடந்த 40 வருடத்தில் இல்லாத அளவிற்குக் குழந்தை பிறப்பு விகிதம் 2020ல் குறைந்துள்ளதாகச் சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா-வையும் நாட்டின் பொருளாதாரச் சரிவையும் எதிர்த்துப் போராடி வந்த சீனா தற்போது வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும் குழந்தை பிறப்பு விகிதத்தில் 40 வருடச் சரிவு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.
குழந்தை பிறப்பு விகிதம்
2019ல் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 10.41 சதவீதமாக இருந்தது. இது 2020ல் 8.52 சதவீதமாகக் குறைந்துள்ளது. சீனாவின் புள்ளியியல் 2021 வருடப் புத்தகத்தில் 1978க்குப் பின் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 10 சதவீதத்திற்குக் குறைவாகியுள்ளது என Caixin தெரிவித்துள்ளது.
சீனா புள்ளியியல் தரவு
மேலும் சீனாவில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் விகிதம் 1.3 ஆக இருக்கும் வேளையில் 2020ல் வெறும் 1.2 கோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது எனச் சீனாவின் புள்ளியியல் தரவுகள் கூறுகிறது. இது தற்போது பெரிய பிரச்சனையாக இல்லை என்றாலும் நீண்ட கால அடிப்படையில் பெரும் பிரச்சனையாக மாறும்.
சீனா விலைவாசி
சீனாவில் விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தால் குழந்தை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் நிதிநிலையில் சிறப்பாக இருக்கும் மக்களும், சீனா அரசு ஒற்றைக் குழந்தை கொள்கையை நீக்கிய பின்பும் ஒரு குழந்தை போதும் என மனப்பான்மையில் உள்ளனர்.
குழந்தை வேண்டாம்
இதேவேளையில் சீனா இளைஞர்கள் மத்தியில் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என மனப்பான்மையும் அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. இது சீனாவில் மட்டும் அல்லாமல் உலகில் பல இடங்களில் இதுபோன்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது.
மத்தியில்
மக்கள் மத்தியில் இந்த ஒரு குழந்தை போதும் என்ற மனப்பான்மையும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என மனப்பான்மை குறித்தும் சீனாவின் முன்னணி சமூகவலைத்தளமான Weibo-வில் ஆய்வு செய்யப்பட்ட போது 57,000 பேர் கலந்து கொண்டனர். இதில் அதிகமானோர் குறிப்பிட்ட காரணம் "high living costs" அதாவது அதிகப்படியான விலைவாசி.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications