கட்டுமான பணியிலும் ரோபோவா? சாதித்து காட்டிய சீனா.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா!!

உலக அளவில் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் என்னதான் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தாலும் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்தி அனைவரும் எளிமையாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மாற்றுவதில் சீனா தொடர்ந்து தன்னை நிரூபணம் செய்து வருகிறது.

சீனா ரோபோக்களை மட்டுமே வைத்து மிகப்பெரிய ஒரு கட்டுமான பணியை முடித்து இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அவருடன் எலான் மஸ்க் உட்பட பல்வேறு அமெரிக்க தொழில் அதிபர்களும் பயணம் மேற்கொண்டு இருந்தார்கள்.

கட்டுமான பணியிலும் ரோபோவா? சாதித்து காட்டிய சீனா.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா!!

அப்போது எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு ரயில் நிலையத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது குறித்து எதுவும் அவர் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தான் இந்த ரயில் நிலையம் வெறும் ரோபோக்களை வைத்து 38 மாதங்களுக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சாங்கிங் நகரத்தில் இருக்கும் ரயில்வே நிலையம் தான் இது. ரோபோக்களை வைத்து 38 மாதங்களிலேயே இந்த ரயில் நிலையத்தை சீனா கட்டி முடித்து இருக்கிறது.

2025 ஆம் ஆண்டு மே மாதம் இது மக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. தென்மேற்கு சீனாவின் சாங்கிங் பகுதியில் அமைந்து இருக்கக்கூடிய இந்த ரயில் நிலையம் சீனாவில் மக்கள் தொகை அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையில் மிகப்பெரிய ஒரு ரயில் நிலையமாக இருக்கிறது.

Also Read

அதிக தொழில் நிறுவனங்கள் இருக்கக்கூடிய இந்தப் பகுதியில் சீனா தன்னுடைய பொறியியல் நிபுணத்துவத்தை மட்டும் இல்லாமல் நவீன தொழில்நுட்பத்தின் நிபுணத்துவத்தையும் நிரூபிக்கும் வகையில் இந்த ரயில் நிலையத்தை கட்டி முடித்திருப்பது தான் ஆச்சரியம். பல்வேறு நாடுகளும் ஒரு பெரிய கட்டமைப்பை கட்டி முடிக்க பல ஆண்டுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையில் சீனா 1.22 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு ரயில் நிலையத்தை 38 மாதங்களில் கட்டி முடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

மனிதர்கள் உதவியோடு முழுக்க முழுக்க ரோபோக்களை மட்டுமே கொண்டு இந்த ரயில் நிலையத்தை கட்டி முடித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது சீனா. அதாவது 90% ரோபோக்கள் 10% மனிதர்கள் என்ற விகிதத்தில் கட்டுமான பணி நடந்துள்ளது. இதனால் சம்பளம் மிச்சம், மனிதர்கள் கட்டுமான பணியில் இறப்பது, காயமடைவது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

சாங்கிங் ஆட்டோ மொபைல், மோட்டார் சைக்கிள் ,எலக்ட்ரானிக்ஸ் மற்றும் லேப்டாப் ,செமி கண்டக்டர், கெமிக்கல் என பல்வேறு உற்பத்தியிலும் முதலிடத்தில் இருக்கும் இந்த நகரம். இந்த நகரத்தில் மக்களின் போக்குவரத்துக்காகவும் சரக்கு போக்குவரத்துக்காகவும் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பு தேவைப்பட்டது. இந்த சூழலில் தான் 15 பிளாட்பார்ம்கள் 29 டிராக்குகள் கொண்டு இந்த ரயில் நிலையத்தை கட்டமைத்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 16,000 பயணிகளை கையாளும் வகையில் எட்டு அடுக்கு கொண்டதாக இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

அதிவேக ரயில்கள் ,பாரம்பரிய ரயில்கள் ,பேருந்துகள், டாக்ஸிகள் உள்ளிட்டவை அனைத்தும் இயங்கக்கூடிய ஒரு மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப்பாக இது இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் இதன் கட்டுமான பணி தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+