பெய்ஜிங், சீனா: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் சீனா பாதுகாப்பு துறைக்கான தன்னுடைய நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை, உற்பத்தி, தொழில், பொருளாதாரம் என அனைத்திலும் இந்தியாவுடன் போட்டி போடக்கூடிய ஒரு நாடு தான் சீனா. இந்தியாவின் அண்டை நாடாக மட்டும் இல்லாமல் எல்லையில் அவ்வப்போது பிரச்சினை கொடுக்கும் ஒரு நாடாகவும் சீனா இருக்கிறது. சீனா இந்த ஆண்டு தங்களுடைய பட்ஜெட்டில் 249 பில்லியன் டாலர்களை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சீனா அரசு தயாரித்துள்ள பட்ஜெட் அறிக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ள. இதன்படி இந்த ஆண்டில் சீன அரசு பாதுகாப்புத் துறைக்காக 249 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.2% அதிகமாகும். கடந்த ஆண்டு சீனா அரசு 232 பில்லியன் டாலர்களை தான் பாதுகாப்புத் துறைக்கு என ஒதுக்கீடு செய்திருந்தது.
அமெரிக்காவைத் தொடர்ந்து உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பட்ஜெட்டாக சீனாவின் பட்ஜெட் பார்க்கப்படுகிறது. சீனாவை பொறுத்தவரை இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமான தொகையை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. சீனா அரசு தொடர்ந்து தங்களுடைய பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்திய வண்ணம் இருக்கிறது. இந்தியா உடனான எல்லை பிரச்சினை, தென் சீன கடல் விவகாரம் மற்றும் தைவான் உடனான பிரச்சனை என பல்வேறு மோதல்களை எதிர் கொண்டிருப்பதால் சீனா தொடர்ச்சியாக தன்னுடைய பாதுகாப்பு படையை வலுப்படுத்தி வருகிறது.
எந்த ஒரு சூழலிலும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் வகையில் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீட்டை சீனா அதிகப்படுத்தியுள்ளது. சீனா ஏற்கனவே பல்வேறு விமானம் தாங்கி போர்க்கப்பல்களையும். அதிநவீன கப்பல்களையும் கட்டமைத்து வருகிறது. அதேபோல நவீன வசதிகள் கொண்ட போர் விமானங்களையும் உருவாக்கி வருகிறது.
தங்கள் நாடு தங்களுடைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே சீன அரசு பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் எந்த ஒரு பிரிவினைவாத நடவடிக்கைகளையும் அவர்களுக்கு வரும் வெளிநாட்டு ஆதரவுகளையும் நாங்கள் முழுமையாக தடுப்போம் என கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை 81 பில்லியன் டாலர்களை தான் பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளில் எல்லை கோட்டுக்கு அருகே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் சீன அரசு எல்லைப் பகுதியில் தங்களுடைய நிலையை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்து பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது .
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications