அமெரிக்காவில் அமெரிக்க பாணி ஜனநாயகம் தான் இருக்கும். சீனாவின் அரசு அதற்கே உரிய சீன பாணியில் தான் இருக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம், மனிதாபிமானம் என எல்லாம் மனித நேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட என ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
இந்தோனேஷியாவில் 2 நாள் நடைப்பெறும் ஜி20 அமைப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி
இந்த மாநாட்டில் பல முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போது அமெரிக்கா சமீப காலமாக சீனா மீது சுமத்தி வந்த குற்றசாட்டுகளுக்கு பதில் கொடுக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுதந்திரம் என்பது கிடையாது
குறிப்பாக சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று கூறியிருப்பது, அமெரிக்காவுக்கு கூறிய சரியான பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது. சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறையே நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து பல தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், பலர் இதனை சர்வதிகாரம் என்றும் கூறி வருகின்றனர். நீதித்துறை சுதந்திரமாக இல்லை, ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று தொடர்ந்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
பனிப்போர்
அதுமட்டும் அல்ல நிறுவனங்களும் சுதந்திரமாக செயல்பட சீனாவில் அனுமதி இல்லை என்றெல்லாம் பேசப்பட்டன. அதோடு சீனா தாய்வானுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அது குறித்தும் அமெரிக்கா கடும் விமர்சனங்களை செய்து வருகின்றன . அதிலிருந்து இரு நாடுகளும் நேரடியாகவே விமர்சனங்களை முன்வைக்க தொடங்கின. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பனிப்போர் தொடர்ந்து இருந்து வந்தது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா சமீப காலமாக சில நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கொரோனாவின் காரணமாக அங்கு ஜீரோ கோவிட் பாலிசி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் பிரச்சனை தான்
இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போரால் சப்ளை சங்கிலி பாதிக்கப்பட்ட நிலையில், சீனா லாக்டவுனும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும், சீனாவினை விட்டு வெளியேற முயன்று வருகின்றன.
நல்ல விஷயம்
எது எப்படியோ மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இன்று ஜி-20 உச்சிமாநாட்டில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பு வளர்ந்துவரும் வேறுபாடுகளைச் சமாளிக்கவும், மோதலைத் தவிர்க்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா சீனா இடையேயான பனிப்போரை குறைக்க வழிவகுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications