உலகின் தொழிற்சாலை என்று அழைக்கப்பட்ட சீனா, இப்போது உலகிற்கு சேவை வழங்கும் டிஜிட்டல் ஹப்'பாக மாறத் துடிக்கிறது. அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால், சீனாவின் டிஜிட்டல் ஏற்றுமதியானது விண்ணை தொட்டுள்ளது.
இது இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் சேவைத் துறைக்கு விடப்பட்ட நேரடி சவாலா? பிபிஓ (BPO), சாப்ட்வேர் மேம்பாடு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் என இந்தியா ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் சீனா எப்படி ஊடுருவுகிறது? இந்திய நிறுவனங்கள் தங்களை தற்காத்து கொள்ள போவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

ரெக்கார்ட் பிரேக்!
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பைட் டான்ஸ் (ByteDance), டென்சென்ட் (Tencent) மற்றும் அலிபாபா (Alibaba) ஆகியவை நேரடி ஒளிபரப்பு (Live Streaming), இ-காமர்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் உலகளாவிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இதன் விளைவாக, சீனாவின் டிஜிட்டல் சேவை வருவாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
வரலாற்று சாதனை!
சீனாவின் வெளிநாட்டு வர்த்தக புள்ளி விவரங்களின்படி, 2025-ம் ஆண்டில் டிஜிட்டல் சேவைகளின் மூலம் கிடைத்த வர்த்தக உபரியானது 33 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். இந்த வளர்ச்சி விகிதத்தில் டெலிகாம், கம்ப்யூட்டர் மற்றும் ஏஐ (AI) உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள் முக்கிய பங்கு வகித்துள்ளது. இவை கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 30% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
சீனாவிற்குள் நிலவும் கடும் போட்டி மற்றும் உள்நாட்டில் குறைந்து வரும் தேவையால், அந்நாட்டு நிறுவனங்கள் இப்போது உலக நாடுகளை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.
டெக் ஜாம்பவான்கள் முதலீடு!
தொடர்ந்து சர்வதேச அளவில் டெக் துறையில் அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் சீன டெக் நிறுவனங்களும் அவற்றின் முதலீடுகளை கணிசமாக உயர்த்தியுள்ளன. குறிப்பாக பைட் டான்ஸ் (TikTok) நிறுவனம் தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, பிரேசிலில் சுமார் 38 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ தரவு மையத்தை (AI Data Center) உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கால் பதித்த பிறகு, இப்போது தென் அமெரிக்க சந்தையை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று டென்சென்ட் நிறுவனமும் சிலிக்கான் வேலி முதல் சிங்கப்பூர் மற்றும் ரியாத் வரை தனது கிளவுட் வசதிகளை விரிவுபடுத்தி, வீடியோ கான்பரன்சிங் மற்றும் கேமிங் சேவைகளை வழங்கி வருகிறது. அலிபாபா நிறுவனமும் லசாடா (Lazada) போன்ற தளங்கள் மூலம் உலகளாவிய இ-காமர்ஸ் சந்தையைக் கட்டுப்படுத்துகிறது.
உற்பத்தி துறையும் - டிஜிட்டல் சேவையும்?
சீனாவின் மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு தேவையான தரவுச் செயலாக்கம் (Data Processing), தகவல் சேமிப்பு (Data Storage) ஆகியவற்றிற்கு சீன கிளவுட் நிறுவனங்களையே (Huawei, Alibaba, Tencent) அவை நாடுகின்றன. அதாவது, பொருட்களை விற்கும் போது, அதற்கான டிஜிட்டல் சேவையையும் நாங்களே தருவோம் என்ற உத்தியை சீனா கையில் எடுத்துள்ளது. இது அவற்றின் உற்பத்தி வளர்ச்சியோடு, சேவை துறை வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்கள்
அமெரிக்கா - சீனா இடையிலான பனிப்போர் அவ்வப்போது புகைந்து வரும் சூழலில், ஏற்கனவே அமெரிக்கா சீனாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக, சீன ஏஐ நிறுவனங்கள் இப்போது வெளிநாடுகளில் தரவு மையங்களை அமைத்து வருகின்றன. இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்களை எளிதாக அணுக முடியும் என அவை கருதுகின்றன.
இந்தியாவுக்குப் போட்டியா?
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வகைப்பாட்டின் படி, டெலிகாம், கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது (மென்பொருள் அவுட்சோர்சிங் துறையில் இந்தியாவின் ஆதிக்கம் இதற்கு முக்கியக் காரணம். அதேசமயம் சீனா நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால் தற்போது சீனா சாஃப்ட்வேர் மற்றும் தரவு சார்ந்த சேவைகளில் தீவிர கவனம் செலுத்துவதால், எதிர்காலத்தில் இது இந்திய ஐடி (IT) துறைக்கு ஒரு பெரிய சவாலாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியா தொடர்ந்து டெக் துறையில் அடுத்தடுத்த அம்சங்களை விரிவாக்கம் செய்து வருவது, சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றம் செய்து கொள்வது, எதிர்காலத்தில் சந்தை பங்கை இழக்காமல் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications