சீனாவின் மோசமான நிலை.. சரியும் பொருளாதாரம்.. 1.5 வருடத்தில் இல்லாதளவு சரியலாம்..!

சீனாவின் பொருளாதாரம் ஒன்றரை வருடத்தில் இல்லாத அளவுக்கு 4வது காலாண்டில், சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அனுதினமும் அதிகரித்து வரும் கொரோனவுக்கு மத்தியில் தேவையானது குறைந்துள்ளது.

இதனால் வட்டி விகித நடவடிக்கைகளில் முக்கிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடன் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிடிபி சரியலாம்

ஜிடிபி சரியலாம்

முன்னதாக அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் ஜிடிபி விகிதமானது 3.6% வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டாவது காலாண்டில் 2020ல் 4.9% ஆக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது சரிவினைக் காணலாம். இதே காலாண்டு அடிப்படையில் இருக்கும்போது முந்தைய காலாண்டினை விட 1.1% வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

நடப்பு ஆண்டில் ஜிடிபி விகிதமானது 8% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலாண்டு வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என்றாலும், மொத்தமாக 2021ல் வளர்ச்சி காணலாம் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓமிக்ரானால் தாக்கம்

ஓமிக்ரானால் தாக்கம்

சீனாவின் இந்த வளர்ச்சி விகிதம் குறித்தான தரவானது நாளை காலை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி பொருளாதார நாடான சீனாவில் ஓமிக்ரானால் பொருளாதாரம் 2021ல் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியானது நடப்பு ஆண்டிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான கட்டுப்பாடுகள்

கடுமையான கட்டுப்பாடுகள்

தொடர்ந்து சீனாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தாக்கம் மத்தியில் தேவையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து பல சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றது. சமீபத்தில் சீனாவில் அதிகரித்து வந்த தாக்கம் மத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெதுவான வளர்ச்சி காணலாம்

மெதுவான வளர்ச்சி காணலாம்

2021ல் ஒட்டுமொத்த பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டாலும், சில துறைகளில் வலுவான வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் அந்த வலுவான வளர்ச்சி கண்ட துறைகள் கூட நடப்பு ஆண்டில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீன அரசு தொழிற்துறையில் உள்ள கார்ப்பன் உமிழ்வைத் கட்டுப்படுத்துவதை தொடர்ந்து வருகின்றது.

வட்டி விகித நடவடிக்கை

வட்டி விகித நடவடிக்கை

தற்போது மத்திய வங்கியானது வட்டி விகித நடவடிக்கையில் பெரும் தளர்வு இருந்தாலும், மேலும் தளர்வு அளிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. அப்படி இருந்தால், அது மேற்கொண்டு வளர்ச்சிக்கு உறுதுணை புரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போதைக்கு அதிகரித்து வரும் ஓமிக்ரான் மத்தியில், கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சரிவுக்கு வழிவகுக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+