சீனாவின் மோசமான நிலை..பெருந்தொற்று காரணமாக இவ்வளவு பிரச்சனையா?

சீனாவின் பொருளாதாரம் கொரோனா காரணமாக மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. கடந்த நான்காவது காலாண்டில் பொருளாதாரம் கடுமையாக மந்த நிலையில் இருந்தது.

இதற்கிடையில் 2022ல் வளர்ச்சி விகிதமானது அரை நூற்றாண்டில் மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. அதிக ஊக்கத்தினை அளிக்க வேண்டிய இடத்தில் அரசுகள் வட்டியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

வளர்ச்சி எப்படியிருக்கு?

வளர்ச்சி எப்படியிருக்கு?

இதற்கிடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அக்டோபர் - டிசம்பர் மாதத்தில் 2.9% ஆக இருந்தது என NBS தரவானது காட்டுகின்றது. இது மூன்றாவது காலாண்டில் 3.9% ஆக இருந்தது. இது இரண்டாவது காலண்டில் 0.4% விரிவாக்கம் கண்டிருந்தது. இதே 4வது காலாண்டில் கடந்த காலாண்டினை காட்டிலும் பெரியளவில் வளர்ச்சி காணவில்லை என்றே கூறலாம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கடந்த 2022ம் ஆண்டில் வளர்ச்சி விகிதமானது 3% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2021ல் 8.4% ஆக இருந்தது. இதே டிசம்பர் மாத தொழில் துறை உற்பத்தியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 1.3% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இதே நவம்பர் மாதத்தில் கூட 2.2% வளர்ச்சி கண்டிருந்தது.

முதலீடுகள் சரிவு

முதலீடுகள் சரிவு

டிசம்பர் மாதத்தில் சில்லறை விற்பனையானது -1.8% சரிவினைக் கண்டுள்ளது. இதே நவம்பர் மாதத்தில் -5.9% சரிவினைக் கண்டிருந்தது.

இதே ஜனவரி - டிசம்பர் மாதங்களில் நிலையான வருமானம் தரும் முதலீடுகள் 5.1% வளர்ச்சியினை கண்டுள்ளது. இதே ஜனவரி - டிசம்பர் மாதங்களில் சொத்துகளில் முதலீடு -10% சரிவினைக் கண்டுள்ளது.

 வேலையின்மை விகிதம்

வேலையின்மை விகிதம்

கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதமானது 16 - 24 வருடங்களில் 16.7% ஆக இருந்தது. சீனாவின் மக்கள் தொகையானது 2022ல் 1961ல் இருந்து பார்க்கும்போது முதல் முறையாக சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது.

பங்கு சந்தையில் தாக்கம்

பங்கு சந்தையில் தாக்கம்

சீனாவின் பங்கு சந்தை சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் நிலையில், கரன்சி மதிப்பும் அழுத்தத்தில் காணப்படுகின்றன. எனினும் இவை இரண்டுமே நடப்பு ஆண்டில் நல்ல வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது கொரோனாவில் இருந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தினால் தாக்கம்

பணவீக்கத்தினால் தாக்கம்

சீனாவின் 4வது காலாண்டு ஜிடிபி மற்றும் முழு ஆண்டுக்கான ஜிடிபி விகிதமானது எதிர்பார்ப்பினை காட்டிலும் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த காலாண்டினை காட்டிலும் வளர்ச்சி இருக்காது. தொடர்ந்து பணவீக்கத்தின் தாக்கம் இருந்து வரும் நிலையில் இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் துறையில் கணிசமான வளர்ச்சி என்பது நடப்பு ஆண்டில் இருக்கலாம். இது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கலாம். இதனை விட நுகர்வினை தூண்டுவதற்கு வேறு முக்கிய வழி இல்லை என்றே கூறலாம். ஏனெனில் ஏற்கனவே வருமானம் என்பது பெரிதும் குறைந்துவிட்டது. எப்படியிருப்பினும் ரியல் எஸ்டேட் துறையில் இந்த ஆண்டு கவனம் அதிகரிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+