சீனாவின் வீழ்ச்சி இந்தியாவை கண்டிப்பாக பாதிக்கும்.. - ஜேட்லிக்கு எதிராக ரகுராம் ராஜன் கருத்து

பெய்ஜிங்: சீனாவின் பொருளாதாரச் சரிவு இந்திய பொருளாதாரத்தைக் கண்டிப்பாகப் பாதிக்கும் என மத்திய அரசுக்கு முரண்பாடாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சில வாரங்களுக்கு முன்பாகக் கோலோம்பியா பல்கலைக்கழகத்தில் பேசிய போது, சீன பொருளாதார வீழ்ச்சி இந்திய சந்தையைப் பாதிக்காது, மேலும் உலகப் பொருளாதார வளர்ச்சி உறுதுணையாகவும் புதிய தூணாகவும் இந்தியா விளங்கும் என ஜேட்லி தெரிவித்தார். வாங்க ராஜன் கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்..

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த செளத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு ஆர்பிஐ கவர்னர் அளித்த பேட்டியில், சீனா பொருளாதார வீழ்ச்சி, இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இத்தகைய வீழ்ச்சியால் சீனா நாடுகளின் தேவை அதிகளவில் குறையும், இதனால் பிற நாடுகளில் உள்ள சீன ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் சில நாடுகள் சீனாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யாவிட்டாலும், அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இத்தகைய காரணிகளும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என ராஜன் தெரிவித்தார்.

 

இந்தியாவும்.. சீனாவும்..

இந்தியாவும்.. சீனாவும்..

சீனா சந்தையைப் பொருத்த வரை இந்தியா மிகப்பெரிய இறக்குமதியாளர், அந்நாட்டில் தயாரிக்கப்படும் மலிவான பொருட்களுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய மார்கெட் உண்டு. இந்நிலையில் சீனாவிற்கு ஏற்றுமதி நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவிற்குப் பாதிப்பு மிகவும் குறைவு என்றாலும், ஆசிய சந்சையிலும், சர்வதேச பொருளாதாரச் சந்தையிலும் சீனா மிகப்பெரிய பொருளாதார நாடு.

இச்சூழ்நிலையில் சீனா, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டால் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியாவும் பாதிக்கப்படும் எனத் தனது கருத்தை விவரித்தார்.

 

தவறான சித்தரிப்பு..

தவறான சித்தரிப்பு..

மேலும் சீனாவின் வீழ்ச்சி இந்திய சந்தைக்கு மகிழ்ச்சி போன்ற கருத்துக்கள் சீன ஊடகங்களில் இந்திய சந்தையைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் விருது..

டாக்டர் விருது..

ஹாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நேற்று ரகுராம் ராஜன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்தது. இதற்காக அவர் ராஜன் ஹாங்காங் சென்றிருந்தார்.

பிரதமர் மோடி..

பிரதமர் மோடி..

இந்திய பரிதமர் நரேந்திர மோடி அண்டை நாடுகளுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து பல முயற்சிகளைச் செய்துவருகிறார். மேலும் இந்திய சந்தை மேற்கத்திய நாடுகளை விடவும் கிழக்கு நாடுகளுடன் இணைந்து செயல்படவே மிகவும் ஆர்வமாக உள்ளது.

மேலும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி மற்றும் சீனா சில்க் ரோடு திட்டத்தில் இணைந்து இந்தியாவும் சீனாவும் பல வளர்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளது. இது இரு நாடுகளுக்கு மிகப்பெரிய வர்த்தகக் கூட்டணியாக அமையும் என ராஜன் தெரிவித்தார்.

 

சீனாவிடம் இருந்து பாடம்..

சீனாவிடம் இருந்து பாடம்..

மேலும் இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் சீனாவிடம் இருந்து உற்பத்தி துறைக்கான வழிமுறைகள் மற்றும் அதன் கட்டமைப்பு, கிராம மக்களை எப்படித் தொழிற்துறையில் இணைப்பது, எப்படி அன்னிய முதலீட்டைப் பயன்படுத்துவது என்பதைக் கவனிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ராஜன் தெரிவித்தார்.

உள்கட்சி பூசல்

உள்கட்சி பூசல்

மத்திய அரசு இந்திய சந்தையில் ரிசர்வ் வங்கியின் ஆதிக்கத்தை குறைக்க பல முயற்சிகளை செய்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் அருண் ஜேட்லி, ராகுராம் ராஜன் மத்தியில் இருக்கும் மாறுப்பட்ட வியூகம் மற்றும் கருத்துகளால் தொடர்ந்து இத்தகைய கருத்து வேறுபாடுகளை இருவரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+