டெல்லி: கடந்த சில வருடங்களாகவே பொருளாதார ரீதியில் அமெரிக்காவுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட அறிக்கையில் சீனா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது என தெரிவித்து இருந்தது, இதற்கான பல சான்றுகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளது ஐஎம்எஃப். இதனால் வல்லரசு நாடு என காலம்காலமாய் புகழ் பாடிய அமெரிக்கா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வு 2014ஆம் ஆண்டிற்குள் நடக்கும் என உலக வங்கி சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்ததை, நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொள்முதல் திறன் இணை
சீனாவின் 2014ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு, கொள்முதல் திறன் இணை கணக்கீட்டின் படி 17.6 டிரில்லியன் டாலராகும், அது அமெரிக்காவை விட 200 பில்லியன் டாலர் அதிகமாகும்.
அமெரிக்காவின் வளர்ச்சியின் நிலை
கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா தான் உலகின் முதன்மையான பொருளாதார நாடாக விளங்குகிறது. இந்நிலையில் சீனா இவ்விடத்தை பரித்துக்கொண்டுள்ளது, ஆனால் இந்நாட்டின் வளர்ச்சி தடைப்படவில்லை. எனவே இனிவரும் காலத்தில் இருநாடுகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் எனவும் ஐஎம்எஃப் தெரிவித்திருந்தது.
இந்தியா
அமெரிக்காவும் சீனாவும் முதல் இடத்திற்கு போட்டிபோட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவின் நிலை என்ன. இப்படியலில் இந்தியா முன்றாம் இடத்தில் உள்ளது. 2014ஆம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 7.277 டிரில்லியனாக உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் 10 டிரில்லியன் டாலர் வித்தியாசம்.
சீனாவின் வளர்ச்சி யாருக்கு பாதிப்பு
தற்போது உள்ள நிலையில் சீனாவின் வளர்ச்சி இந்தியாவிற்கு பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் அளித்தாலும், பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது சீனா.
அமெரிக்கா - சீனா
சீனாவில் உற்பத்தி சார்ந்த வளர்ச்சி மட்டுமே அதிகமாக உள்ளது, ஆனால் அமெரிக்காவிடம் தொழில்நுட்ப சார்ந்த வளர்ச்சி மிகவும் அதிகம் இதனால் அமெரிக்காவின் வளர்ச்சியில் ஸ்திர தன்மை மிகவும் அதிகம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications