சீனா நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி எப்போதும் இல்லாத வகையில் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளது.
தற்போது சீனா, ஏற்றுமதி மற்றும் உற்பத்தி அளவுகளை நம்பி இருக்கும் பொருளாதார நிலையைச் சேவை மற்றும் நுகர்வோர் சார்ந்ததாக மாற்றத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

2009ஆம் ஆண்டுச் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாகத் திகழும் சீனா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் வெளியான சீனா ஏற்றுமதி அளவுகளில், பல மாதங்களாக மோசமாகச் செயல்பட்ட சீன சந்தையில் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. இதனாஸ் இந்நாட்டில் கணிசமான அன்னிய முதலீடும் அதிகரித்தது.
அதுமட்டும் அல்லாமல் சீன அரசு தனது செலவினத்தைக் குறைக்கச் சரிவர இயங்காத பல நிறுவனங்களை முழுமையாக மூடவும். விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது.
மற்றொரு புறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சேவை மற்றும் நுகர்வோர் சார்ந்ததாக மாற்றி அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications