நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சீனா.. இந்திய நிறுவனங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு..!

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக சீனாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது.

இதனால் சீனாவின் பல உற்பத்தி நிறுவனங்கள் மின்வெட்டால் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன. இதற்கிடையில்தான் உற்பத்தியானது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்வெட்டு நீடித்தால் சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

தற்போதுதான் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள தொடங்கியுள்ள சர்வதேச நாடுகள், பொருளாதார வளர்ச்சியை காண தொடங்கியுள்ளன. தொழில்துறை உற்பத்தி எனது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளன. இந்த நிலையில் கடும் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, சர்வதேச நாடுகள் பலவும் அவதிப்பட்டு வருகின்றன.

மின் உற்பத்தி பாதிப்பு

மின் உற்பத்தி பாதிப்பு

குறிப்பாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இது சீனாவின் தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை

நிலக்கரி பற்றாக்குறை

சீனா தனக்குத் தேவையான நிலக்கரிக்கு மற்றொரு அண்டை நாடான ஆஸ்திரேலியாவை சார்ந்திருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ரீதியாக ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு மத்தியில், சீனாவுக்கு தற்போது நிலக்கரி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல சிக்கல்களுக்கு மத்தியில் நிலக்கரி பற்றாக்குறை நிலவி வருகிறது.

கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரிக்கை

கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரிக்கை

பற்றாக்குறைக்கு மத்தியில் மின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் சீனாவில் கடும் மின்வெட்டு நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் சீன நிறுவனங்களின் உற்பத்தி செய்யும் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் சீனாவின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி விகிதமானது 8.2 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவீதமாக குறையும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான சீனாவில் இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருப்பது மிக கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சீனாவின் இந்த சிக்கல்கள் இந்தியாவிற்கு நல்லதொரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் கெமிக்கல் வர்த்தகம் மற்றும் இரும்பு உற்பத்தி துறைக்கு இது மிகப்பெரிய நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

கடுமையான மின்வெட்டு மத்தியில் சீனாவின் பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.தள்ளப்பட்டுள்ளனர் இதன் காரணமாக உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு மிகச் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தற்போதுதான் கொரோனாவின் பிடியிலிருந்து உலகநாடுகள் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் சீனாவின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்புகள் ஆக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கெமிக்கல் உற்பத்தி

கெமிக்கல் உற்பத்தி

ஏற்கனவே சீனாவில் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு கெமிக்கல் உற்பத்தியை படிப்படியாக குறைத்து வரும் சீன நிறுவனங்கள், தற்போது மின்வெட்டு காரணமாக இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த வாய்ப்பானது இந்திய நிறுவனங்களுக்கு கை கொடுக்கலாம் என்று ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. தற்போது உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் கெமிக்கல்களுக்கான தேவையானது அதிகரித்து வரும் நிலையில், மேற்கொண்டு இந்திய நிறுவனங்களுக்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக மாறலாம்.

கெமிக்கல் தேவை

கெமிக்கல் தேவை

குறிப்பாக தொழிற்துறைகளில் பயன்படுத்தும் கெமிக்கல், டையிங் கெமிக்கல்கள் மற்றும் விவசாய துறையில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸ் உள்ளிட்டவற்றிற்கு, உள்நாட்டு மற்றும் அண்டை நாட்டிலும் தேவை என்பது அதிகரித்துள்ளதால், இது இந்திய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்ட வழி வகுக்கும் என்று ஆய்வு நிறுவனங்கள் சமீபத்தில் கூறியிருந்தன.

பெரும் இழப்பு ஏற்படலாம்

பெரும் இழப்பு ஏற்படலாம்

இந்தியாவிலும் தற்போது நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது, இதனால் குறைந்த அளவு நிலக்கரி இருப்புகளுடன் இந்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் போராடி வருகின்றன. இந்த நிலையில் நிலக்கரி சப்ளையை உடனடியாக மீட்டெடுக்காவிட்டால் அது பெரிய அளவிலான இழப்பிற்கு வழிவகுக்கும் என்று பல துறையை சார்ந்த நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

எண்ணெய் விலை அதிகரிப்பு

எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச அளவில் நிலவி வரும் பருவம் அல்லாத மழை, சுரங்கங்களில் வெள்ளம், சீனாவில் நிலவி வரும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பலவும் நிலக்கரி உற்பத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தான் நிலக்கரியின் விலையானது சர்வதேச அளவில் மிக அதிக அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் நிறுவனங்கள் தற்போது நிலவி வரும் மின்வெட்டால் எண்ணெய், டீசல் மற்றும் மற்ற எரிசக்தித் பொருட்களை தேடுகின்றனர். இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது.

இரும்பு விலை அதிகரிக்கும்

இரும்பு விலை அதிகரிக்கும்

சீனாவில் நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழ்நிலை வரவிருக்கும் காலாண்டுகளில் இரும்பின் விலை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கலாம். மேலும் கெமிக்கல்களின் விலையும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்பன் அளவை குறைக்கவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் சீனா முயற்சி எடுத்து வரும் இந்த நிலையில், இது மேற்கொண்டு உற்பத்தியினை பாதிக்கும்.

இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு

இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு

இந்தியாவிலும் இறக்குமதிகள் குறையும் வாய்ப்பு உள்ளது. எனினும் இது இந்திய இரும்பு மற்றும் கெமிக்கல் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரவிருக்கும் காலாண்டுகளில் இந்திய நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியினை காணலாம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+