டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

அமெரிக்கா கடந்த 60 நாட்களில் சீனாவின் இரண்டு மிகப்பெரிய மலிவு விலை கச்சா எண்ணெய் ஆதாரங்களை முற்றிலுமாக துண்டித்துள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அடுத்தடுத்து நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு பின்பு பல காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதில் முக்கியமானது சீனாவின் வளர்ச்சியின் வேகத்தை குறைப்பது.

ஆனால் இதுப்போன்ற விஷயம் நடக்கும் என்பதை முன்கூட்டிய சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார், தற்போது இது பலன் அளித்து வருகிறது என ப்ரொப்ஷைனிபியர்ட் பெயரில் இயங்கும் இன்ஸ்டா வீடியோவில் சத்யம் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு..  ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தனது ராணுவ படைகளை வைத்து ஜனவரியில் வெனிசுலா மீதும், கடந்த வாரம் ஈரான் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தி அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளத்தை உலக நாடுகளுக்கு செல்லாமல் முடக்கியுள்ளது.

இதனால் சீனா பல ஆண்டுகளாக மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்யும் வழி மூடப்பட்டுள்ளது. ஆனால் சீனா இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

சீனா பல ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய ரகசிய எண்ணெய் இறக்குமதி நெட்வொர்க்கை இயக்கி வந்தது. ஈரான் எண்ணெய்யை மலேசியா எண்ணெய் என்று மறு பெயரிடப்பட்டும், வெனிசுலா எண்ணெய் பிரேசில் சான்றிதழ்களுடன் கப்பல் மூலம் சீனாவுக்கு இறக்குமதி செய்து வந்தது. கடலின் நடுவே கப்பல் மாற்றம் (ship-to-ship transfer) செய்யப்பட்டு, அமெரிக்க தடைகளை தவிர்த்து ஒரு பேரலுக்கு 8-10 டாலர் குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டது.

2025-ல் சீனா கடல் வழி எண்ணெய் இறக்குமதியில் 13% ஈரானில் இருந்தும், 4-5% வெனிசுலாவில் இருந்தும் பெற்றது. ரஷ்ய எண்ணெயுடன் சேர்த்து மொத்தம் 22% கச்சா எண்ணெய்யை அமெரிக்கா தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து சீனா பெற்றது.இது உலகின் மிக மலிவான எரிசக்தி உத்தியாக இருந்தது.

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு..  ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஆனால் அமெரிக்கா இந்த நெட்வொர்க்கை 60 நாட்களில் முற்றிலும் சிதைத்துவிட்டது. வெனிசுலா அதிபரை பதவியிலிருந்து நீக்கி, நாடு கடத்தி எண்ணெய் வளங்களையும் கப்பல்களையும் பறிமுதல் செய்தது, மெக்ஸிகோவுக்கு வரி அச்சுறுத்தல் விடுத்தது, இப்போது ஈரான் மீது போர் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளத்திற்கு மொத்தமாக தடை விதித்ததுள்ளது.

இதனால் சீனாவின் மலிவு எண்ணெய் வழி முழுமையாக மூடப்பட்டுள்ளது. ஆனால் சீனா, அமெரிக்கா இத்தகைய செயலை செய்யும் என்ற எதிர்பார்த்து இருந்தது. இதற்காக சீனா வெளிநாட்டு கச்சா எண்ணெய்யை நம்பியிருக்க கூடாது என முடிவு செய்தது.

இதற்காக கடந்த பத்தாண்டில் கிளீன் எனர்ஜி துறையில் சுமார் 625 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. சீனா அரசின் 2030 சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி இலக்குகளை 2024-ல் அதாவது 6 ஆண்டுகள் முன்னதாகவே எட்டியது. 2025-ல் புதிய கார் விற்பனையில் 51% மின்சார வாகனங்கள் ஆகும். சீனாவில் இயங்கும் மொத்த வாகனங்களில் 12% மின்சார வாகனங்கள். 2025ல் சீனாவின் எரிபொருள் விற்பனை 5.7% சரிந்துள்ளது, இப்படி சீனா கிளீன் எனர்ஜி துறையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து சுயசார்பு நிலையை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாக உள்ளது.

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு..  ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

சீனா தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட 40% அதிக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் படி, சீனாவின் பெட்ரோல்-டீசல் தேவை ஏற்கனவே உச்சத்தை எட்டியுள்ளது. சூரிய மற்றும் காற்றாலை திறன் 2025 தொடக்கத்தில் முதல் முறையாக நிலக்கரியை முந்தியது.

எனவே அமெரிக்கா வெனிசுலா, ஈரான் கச்சா எண்ணெய் மீது தடை விதித்தாலும், சீனா தள்ளுபடி விலையில் கிடைக்கும் எண்ணெய்யை மட்டும் தான் இழக்கிறது, எவ்விதமான எரிபொருள் பற்றாக்குறையும் சீனாவுக்கு ஏற்படவில்லை. சீனாவுக்கு தற்போது ரஷ்யா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு இது பெரும் பாடாகமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த தேவையில் சுமார் 85% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். பயணிகள் கார்களில் மின்சார வாகனங்கள் வெறும் 4% மட்டுமே. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் பின்தங்கியுள்ளன.

ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் வாங்கி வந்தாலும் அமெரிக்கா வரி அச்சுறுத்தலால் அதை குறைத்துள்ளோம். ரஷ்யாவுக்கு பதிலாக மத்திய கிழக்கு எண்ணெயை வாங்கி வந்தநிலையில் இப்போது ஈரான் தாக்குதலால் அதுவும் ஆபத்தில் உள்ளது.

தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விமான எரிபொருல் விலை உயர்வு மட்டும் அல்லாமல் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு மட்டும் தான் இத்தகைய பிரச்சனையா என்றால் இல்லை, வெளிநாட்டு கச்சா எண்ணெய், எரிவாயு வளத்தை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளுக்கும் இத்தகைய பிரச்சனை உள்ளது.

சீனா இரு உத்திகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தியது: இன்று மலிவு எண்ணெய் வாங்குவது, நாளை வெளிநாட்டு கச்சா எண்ணெய் சார்ப்பு இல்லாத எதிர்காலத்தை கட்டமைப்பது. இது தற்போது பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. இதனால் ஈரான் போர் மூலம் பாதிக்கப்படாத நாடுகளில் சீனா முதன்மையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+