எதற்கும் அசராத டிராகன் தேசம்.. அக்டோபர் மாதத்தின் மீண்டும் டாப் கியரில் தொழிற்துறை.. ஆதாரம் இதோ..!

சீனாவில் நிலவிவரும் மந்த நிலைகளுக்கும் மத்தியிலும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி விகிதமானது நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

இது பல சவால்களுக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதையே சுட்டிக்காட்டுகின்றது.

சீனாவில் கடந்த சில மாதங்களாக கடும் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக கடும் மின்வெட்டு நிலவி வந்தது. இதன் காரணமாக தொழில் துறையினர் பலத்த சரிவை கண்டு வந்தது. குறிப்பாக தொழிற்சாலைகளில் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

சீனா பாதிப்பு

சீனா பாதிப்பு

குறிப்பாக சீனாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், சீனாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனம், சீனாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதை சுட்டிக் காட்டியது.

கொரோனா பற்றிய அச்சம்

கொரோனா பற்றிய அச்சம்

சீனாவின் பல்வேறு விதமான கடுமையான நடவடிக்கைகளுக்கு பின்னர், சீன நிறுவனங்கள் பலவும் சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது சீனாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் முக்கிய நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இப்படி பல சவாலான நிலைக்கும் மத்தியிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சீனாவின் ஏற்றுமதி

சீனாவின் ஏற்றுமதி

இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, சீனாவின் ஏற்றுமதி விகிதமானது கடந்த ஆண்டை காட்டிலும் 27.1% அதிகரித்து, 300.2 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தினை காட்டிலும் 28.1% சரிவு தான். எனினும் தற்போது வரையில் சீனாவின் ஏற்றுமதி வணிகமானது மேம்பட்டுள்ளது.

சீனாவின் இறக்குமதி

சீனாவின் இறக்குமதி

அதேபோல சீனாவின் இறக்குமதி விகிதமும் 20.6% அதிகரித்து 215.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான லாக்டவுனும் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் கவலையளிக்கும் விஷயமாகவே இருந்தாலும், அங்கு பொருளாதாரமும் மிக மெதுவான நிலையிலேயே வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் அது ஏற்றுமதி இறக்குமதியில், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறலாம்.

தாக்கம் அதிகரிக்கலாம்

தாக்கம் அதிகரிக்கலாம்

தற்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் விதமாக, அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு தேவையும் சற்று குறைந்துள்ளது. ஆக இது வரவிருக்கும் மாதங்களில் ஏற்றுமதி இறக்குமதியில் பாதியினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் சர்பிளஸ் விகிதம்

சீனாவின் சர்பிளஸ் விகிதம்

சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் சர்பிளஸ் என்பது 84.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த மாதத்தில் 66.8 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடதக்கது.

அமெரிக்க நிலவரம்

அமெரிக்க நிலவரம்

இதே சர்வதேச அளவில் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவின் சர்பிளஸ் விகிதமானது கடந்த அக்டோபர் மாதத்தில் குறைந்துள்ளது. இந்த விகிதமானது அமெரிக்காவில் 40.7 பில்லியன் டாலர்களாக குறைந்தது கடந்த செப்டம்பர் 42 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடதக்கது. இதே ஐரோப்பாவில் இந்த சர்பிளஸ் விகிதம் 25.9 பில்லியன் டாலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+