பெய்ஜிங்: உலக நாடுகளில், உள்நாட்டு தயாரிப்புகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் சீனா மார்ச் மாதத்தில் 15 சதவீத சரிவை தழுவியுள்ளது. இதனால் இந்நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்நாட்டின் கட்டுமானத் துறையின் வளர்ச்சி பாதித்துள்ளதால், 2014ஆம் ஆண்டின் 3வது மற்றும் 4வது காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிகளவில் குறைந்தது.
கணிப்புகள்
மார்ச் மாதத்தில் இந்நாட்டின் ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்ட போதிலும், உலக நாடுகளின் தேவைகள் குறைந்ததால் 15 சதவீதம் குறைவை சீனா சந்தித்துள்ளது.
இறக்குமதி
உள்நாட்டுத் தேவைகள் குறைந்ததால் நாட்டின் இறக்குமதி அளவும் சுமார் 12.7 சதவீதம் குறைந்துள்ளதாகச் சுங்க வரித்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏன் இந்த நிலை?
சர்வதேச சந்தையில் நிலவிய மந்த நிலை மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்நாட்டின் வர்த்தக நிலை அதிகளவில் பாதித்துள்ளது.
டாலரின் மதிப்பு உயர்வால் இந்நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் வரை குறைந்துள்ளதாகச் சீனாவின் வாபாவ் என்ற வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்கள்
இத்தகைய நிலையில் இந்நாட்டின் வர்த்தக நிலை மேம்படப் புதிய வர்த்தகத் திட்டங்கள் வேண்டும் எனச் சீன அரசு கூறுகிறது.
அன்னிய முதலீடு
கடந்த நிதியாண்டில் இந்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகளவில் குறைந்ததை அடுத்து, ஐஎம்எஃப், உலக வங்கி போன்ற அமைப்புகள் சீன வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தனர்.
இதன் எதிரோலியாகச் சீனாவில் அன்னிய முதலீட்டு அளவு குறைந்தது, இதனால் புதிய செயல் திட்டங்களை உருவாக்குவதில் சீன அரசு மும்மரமாக இறங்கியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications