பெய்ஜிங்: சீன நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தம் அடைந்து வந்தாலும் அன்னிய முதலீட்டின் அளவுகள் குறைவதாகத் தெரியவில்லை.
2015ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சீனாவில் சுமார் 8.77 பில்லியன் டாலர் அன்னிய முதலீடாகக் குவிந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 4.2 சதவீதம் அதிகமாகும்.

அக்டோபர் மாத முதலீட்டுடன் நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் சீனாவின் அன்னிய முதலீட்டு அளவு 103.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 7.1 சதவீத உயர்வைப் பதிவாகியது, ஆனால் அக்டோபர் மாதத்தில் இதன் உயர்வு வெறும் 4.2 சதவீதமாக இருப்பதாகச் சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளது.

10 மாத முதலீட்டு அளவுகளைப் பார்க்கும் போதும் கடந்த வருடத்தை விடச் சுமார் 8.6 சதவீத அதிக அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது சீனா.
மேலும் சேவைத்துறையில் 19.4% உயர்வும், ஹை டெக் சேவைத் துறையில் 57.5 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications