28 ஆண்டுகளுக்கு பிறகு இது மிக மோசமான வீழ்ச்சி.. பலத்த அடி வாங்கிய சீனா..!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசான சீனாவின் இந்த வீழ்ச்சிக்கு அண்மைக் காலத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினை விட, பல மடங்கு அழுத்ததினை கொடுத்து வரும் கொரோனா வைரஸினால் சீனா பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம்.

அது எந்தளவுக்கு எனில் 1992க்கு பிறகு ஏற்பட்ட மோசமான வீழ்ச்சி இது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ஆக 28 ஆண்டுகளுக்கு பிறகு சீனா இப்படி ஒரு மோசமான நிலையினை சந்தித்துள்ளது எனலாம்.

ஜிடிபி சரிவு

ஜிடிபி சரிவு

இது குறித்து வெளியான அறிக்கையில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 6.8% குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்று உலகினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கம் தான் என்று கூறப்படுகிறது.

வேலை இழக்கும் அபாயம்

வேலை இழக்கும் அபாயம்

சீனாவின் முதல் காலாண்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது, 1992க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சியாக கருதப்படுகிறது. பெருகி வரும் கொரோனா தாக்கத்தினால் நாடு முழுவதும் பெரும்பாலான உற்பத்தி குறைந்துள்ள நிலையில், செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உற்பத்தி துறையில் மேலும் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.8% ஜனவரி - மார்ச் காலாண்டில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் பிரச்சனை

மீண்டும் பிரச்சனை

கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனாவில் கொரோனாவின் உக்கிரத்தால், பொருளாதாரம் சிறிதும் முன்னேற்றம் காணவில்லை எனலாம். மேலும் இது குறித்து வெளியான அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளாவிய தேவையும் சீர்குலைந்து வருகிறது. இது சீனா மீண்டும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

சலுகைகள் வழங்கப்படலாம்

சலுகைகள் வழங்கப்படலாம்

நோமுரா சீனா தனது பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கலாம். இது மூலம் நிதிகளை ஊக்கப்படுத்த வழங்கப்படலாம். குறிப்பாக கடன் சலுகைகள், உள்கட்டமைப்பு என பலவகையிலும் நிதி உட்செலுத்தப்படலாம். ஆக இதன் மூலம் சீனா வளர்ச்சியினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் பணி நீக்கம்

அதிகரிக்கும் பணி நீக்கம்

அதுமட்டும் அல்ல ஜிடிபி விகிதமானது கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 9.8% வீழ்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளிவிவர பணியகம் கூறியுள்ளது. மேலும் கடந்த 2008 -09 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பணி நீக்கங்கள் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதையும் விஞ்சி, உலகளாவிய தேவையை குறைவு காரணமாக, இந்த ஆண்டு கிட்டதட்ட 30 மில்லியன் வேலை இழப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மந்த நிலையை எதிர்கொள்ளும்

மந்த நிலையை எதிர்கொள்ளும்

இப்படி பெருகிவரும் வேலை இழப்புக்கு மத்தியிலும் பெய்ஜிங் அரசு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடன் அளவினை அதிகரிப்பதற்காக தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறும் சீனா வங்கி, நுகர்வினை அதிகரிக்கப்பதற்காக நிதி தூண்டுதலையும் செய்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. எப்படி இருப்பினும் உலகளாவிய தேவை குறைவு காரணமாக சீனா சற்று மந்த நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்பதும் உண்மையே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+