பெய்ஜிங்: 2015ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சீனாவின் ஜிடிபி அளவு 6.9 சதவீதமாகச் சரிந்துள்ளது.
சீனா உள்நாட்டு உற்பத்தி அளவீடுகள் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகளவிலான பொருளாதாரச் சரிவிற்குப் பின் அதிகளிவில் செப்டம்பர் காலாண்டில் குறைந்துள்ளது.
புதிய திட்டம்.. புதிய முதலீடு..
உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவின் இந்தப் பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் புதிய திட்டங்களைுயும், புதிய முதலீடுகளையும் தேடி வருகிறது. தற்போதுள்ள நிலையில் சீன பொருளாதாரம் வளரச் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என உலகின் பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது.
ஏற்றுமதி..
இந்நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்புகள் குறைவான வளர்ச்சியைச் சந்தித்துள்ளதால். சீன நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெறும் ஆர்ட்ர்கள் மற்றும் முதலீடுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்து வருகிறது.
இதனால் இந்நாட்டின் ஏற்றுமதி அளவு அதிகளவில் பாதித்துள்ளது. இதன் காரணமாகவே இந்நாட்டின் ஜிடிபி அளவுகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது.
இலக்கு
இந்நிலையில் சீன அரசு 2015ஆம் நிதியாண்டுக்கான மொத்த பொருளாதார வளர்ச்சி விகித இலக்கை 7 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் 3வது காலாண்டில் சீனா 7 சதவீதத்திற்குக் குறைவான வளர்ச்சியைச் சீன பொருளாதாரம் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாகச் சீன பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஏற்றுமதி அளவுகள்
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது சீன நாட்டின் ஏற்றுமதி அளவுகள் சுமார் 7.9 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் 2015ஆம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் மொத்த ஏற்றுமதியின் அளவு 17.87 டிரில்லியன் யுவான் ஆக உள்ளது எனச் சீனாவின் தேசிய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிற்துறை வளர்ச்சி
கடந்த 9 மாதமாக இந்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 6.2 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது. சொத்துக்கள் மீதான முதலீட்டு அளவுகள் வெறும் 2.6 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications