கொரோனா என்னும் பெரும் அரக்கனை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது சீனா தான்.
இந்த கொரோனாவினால் இன்று உலகமே அல்லோல்பட்டுக் கொண்டுள்ளது. ஒரு புறம் மிகப்பெரிய வல்லரசு நாடும் கூட கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகின்றது.
ஆனால் சீனாவிலிருந்து தான் கொரோனா முதன் முதலாக பரவியது என்ற நிலையில், மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா, தற்போது தனது பொருளாதார வளர்ச்சியினை மிக தீவிரமாக முடக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த காலாண்டினை விட மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி சற்று வலுவானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.
வளர்ச்சி பாதையில் சீனா
மால்கள் திறக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பழைய நிலைக்கு திரும்பியுள்ளனர். முக்கிய வர்த்தக பங்காளிகள் வணிகத்திற்காக திறக்கப்பட்டுளன. இது இந்த ஆண்டு தொடக்கத்தில் காணப்பட்ட வரலாறு காணாத சாதனையை வீழ்த்தி வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிபுணர்கள் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான இது கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.2% வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்றும் கணிக்கப்பட்டது.
மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி தான்
ஆனால் மூன்றாவது காலாண்டில் சீனா 4.9% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது நிபுணர்கள் கணித்த வளர்ச்சி விகிதத்தினை விட சற்று குறைவானாலும், இரண்டாவது காலாண்டில் 3.2% தான் வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இதனுடன் ஒப்பிடும்போது, மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி மிக வேகமாக அதிகரித்துள்ளது எனலாம்.
முதல் காலாண்டில் மோசமான வளர்ச்சி
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் சீன பொருளாதாரம் 6.8% அளவு வீழ்ச்சி கண்டது. அப்போது கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள், உற்பத்தி ஆலைகள் என பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. ஆக அக்காலகட்டத்தில் வளர்ச்சி விகிதம் 1992ம் ஆண்டில் பதிவு செய்த வளர்ச்சியினை விட மோசமான சரிவினைக் கண்டது. இது 28 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மோசமான சரிவு எனலாம்.
வளர்ச்சி பாதையில் உள்ள நாடு
கொரோனாவின் பிடியில் இருந்து மிக வேகமாக மீண்ட சீனா தற்போது வளர்ச்சி பாதையில் உள்ள ஒரே நாடாக உள்ளது. ஆனால் மற்ற நாடுகள் இன்றளவிலும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மோசமான பொருளாதார சரிவினை கண்டு வருகின்றன. இனியாவது இந்த சரிவில் இருந்து மீளுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications