உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து வரும் சீனா கொரோனா தொற்றில் இருந்து பிற நாடுகளைக் காட்டிலும் முன்னதாக மீண்டுள்ள காரணத்தால் 2020 இறுதியில் இருந்து சீன பொருளாதாரம் சரிவில் இருந்து மொத்தமாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.
ஆனால் அதன் பின்பு அடுத்தடுத்துச் சீனா சந்தித்த பிரச்சனையால் இந்நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் ஒரு வருட சரிவைத் தொட்டு உள்ளது.
சீனா
சீனா 2021ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் மழை வெள்ளம், மின்சார உற்பத்தி சரிவு, நிலக்கரி உற்பத்தி சரிவு, சிப் தட்டுப்பாடு, எவர்கிராண்டே கடனில் மூழ்கியது, டெக் நிறுவனங்களின் சீன அரசு எடுத்த நடவடிக்கை, அனைத்தையும் தாண்டி அண்டை நாடுகள் உடனான பிரச்சனை எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டது.
பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பாதிப்பு
கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வந்த சீனா அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ட காரணத்தால் செப்டம்பர் காலாண்டில் மொத்தமாகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு ஒரு வருட சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக எவர்கிராண்டே மற்றும் மின்சாரப் பிரச்சனை தான் சீனாவை அதிகளவில் பாதித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு
செப்டம்பர் காலாண்டில் சீனாவின் மொத்த ஜிடிபி 4.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலாண்டில் சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு இருந்த வேளையில் தற்போது வெறும் 4.9 சதவீதம் என்ற ஒரு வருட சரிவை பதிவு செய்துள்ளது.
ரியல் எஸ்டேட்
சீன அரசு அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை சார்ந்த நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதைக் குறைத்துள்ளது. இதன் மூலம் கட்டுமான துறை பெரிய அளவில் முடங்கியுள்ளது.
மின்சார உற்பத்தி
இதேவேளையில் மின்சார உற்பத்தி அளவுகள் அதிகளவில் குறைந்துள்ள வேளையில் தொழிற்சாலைகளை மூடப்பட்டு உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
வளர்ச்சி
சீனா 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 18.3 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் தற்போது வெறும் 4.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு டெக்னாலஜி துறையில் செய்த நிர்வாகச் சீர்திருத்தத்தை தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications