சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம் கூட, கொரோனாவின் காரணமாக நான்காவது காலாண்டில் மெதுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளது.
2021ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 8.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் தாக்கம் மத்தியில், பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் 4வது காலாண்டில் சற்று மெதுவான வளர்ச்சியினை கண்டு, 4% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தபோக்கு வரவிருக்கும் காலாண்டுகளிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மந்த நிலை
இது முந்தைய காலாண்டில் 4.9% ஆக வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே முதல் காலாண்டில் எதிர்பாராத விதமாக ( ஜனவரி - மார்ச்) காலாண்டில் 18.3% ஆக வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி காலாண்டில் வளர்ச்சி விகிதமானது ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, பொருளாதாரம் அழுத்தத்தில் காணப்பட்டது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான செயல்பாடுகளும் சரிவினைக் கண்டன.
ஏன் சரிவு?
இதற்கிடையில் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வந்த அழுத்தம், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்திலும் சரிவினைக் கண்டுள்ளது. இன்றும் சீனாவின் பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் மந்த நிலையானது மாறியுள்ளது.
இதற்கிடையில் மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக,சீனாவின் மக்கள் வங்கி வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வெட்டு
சீனாவில் நிலவி வந்த நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடுமையான மின்வெட்டு நிலவி வந்தது. இதனால் தொழில் துறையில் உற்பத்தியானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதுவும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
ஓமிக்ரான் அச்சம்
தற்போது சீனாவில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக, மூலதன பொருட்களுக்கான பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டிசம்பரில் சில்லறை விற்பனை குறித்தான தரவானது, 1.7% ஆக குறைந்துள்ளது. இது வரவிருக்கும் காலாண்டு ஜிடிபி வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி குறைப்பு
எப்படியிருப்பினும் மீடியம் டெர்ம் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், இது தொழில்துறையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மற்ற மத்திய வங்கிகளானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், அதற்கெல்லாம் மாறாக சீனா வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications