சீனாவுக்கு பலமா அடி விழுந்திருக்கே..! ஓ மை காட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த செப்டம்பர் 2019 -ல் வெறும் 4.5 சதவிகிதமாகத் தான் இருக்கிறது.

அதற்கு முந்தைய ஜூன் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதம் தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

இந்த மொத்த 2019 - 20 நிதி ஆண்டிலேயே இந்தியப் பொருளாதாரம் ஏறக்குறைய 5 சதவிகிதம் வரை வளர்ச்சி காணலாம் என பல அமைப்புகள் சொல்லி வருகிறார்கள்.

அவர்களுக்கு மட்டும் சிறப்பு பென்ஷனா..? படிச்சிப் பாருங்க நீங்களே ஓகே சொல்வீங்க..!அவர்களுக்கு மட்டும் சிறப்பு பென்ஷனா..? படிச்சிப் பாருங்க நீங்களே ஓகே சொல்வீங்க..!

அந்த பட்டம்

அந்த பட்டம்

உலகிலேயே வேகமாக வளர்ச்சி காணும் பொருளாதாரங்கள் பட்டியலில், சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக இந்தியா கோலோச்சிக் கொண்டு இருந்தது. ஆனால் கடந்த சில காலாண்டுகளாக சரிந்து வரும் ஜிடிபி வளர்ச்சியினால், இந்தியப் பொருளாதாரம் தன் முதலிடத்தை சீனாவிடம் பறி கொடுத்தது.

11 வருட சரிவு

11 வருட சரிவு

ஒருவேளை, ஆர்பிஐ மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய புள்ளியியல் துறை சொன்ன படி இந்தியப் பொருளாதாரம் 2019 - 20 நிதி ஆண்டில் 5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டால், அது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

பக்கத்து வீடு
 

பக்கத்து வீடு

இந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக் காரரான சீனாவும் தன் ஜிடிபி வளர்ச்சியில் ஒரு பெரிய தேக்கத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். டிசம்பர் 2019 காலாண்டில் சீனாவின் ஜிடிபி 6.0 % வளர்ச்சி கண்டு இருக்கிறது

முழு ஆண்டுக்கு

முழு ஆண்டுக்கு

ஒட்டு மொத்த ஆண்டாகப் பார்க்கும் போது, கடந்த 2018-ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 6.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது. ஆனால் இந்த 2019-ம் ஆண்டில் 6.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறதாம். இந்த 6.1 சதவிகிதம் வளர்ச்சி என்பது 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, சீனா பார்க்கும் மிகக் குறைந்த வளர்ச்சியாம்.

மேலும் சரிவு

மேலும் சரிவு

தற்போது இருக்கும் உலக பொருளாதார சூழலில் சீனாவின் பொருளாதாரம் மேலும் சரிவைச் சந்திக்கலாம் எனச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். இந்த 2020-ம் ஆண்டு, சீனாவின் ஜிடிபி 5.9 % மட்டுமே வளர்ச்சி காணலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு இலக்கு

அரசு இலக்கு

கடந்த 2019-ம் ஆண்டு சீன அரசு 6 - 6.5 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி காண வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து இருந்தார்களாம். ஆனால் இந்த ஆண்டில், சீன அரசே 6 சதவிகிதம் வரை மட்டுமே ஜிடிபி வளர்ச்சி காண இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு இருப்பதாக ராய்டர்ஸ் சொல்லி இருக்கிறார்கள்

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

தற்போது வரை ஒரு தெளிவான முடிவுக்கு வராத அமெரிக்க சீன வர்த்தகப் போர், சரிந்து வரும் முதலீடுகள், அமெரிக்காவில் நிலவும் ஒரு நிலையற்ற அரசியல், கச்சா எண்ணெய் விலை... என சீனாவும் இந்தியா போலவே ஒரு பெரிய நெருக்கடியான சூழலைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

நிலை பெற வேண்டும்

நிலை பெற வேண்டும்

இந்த செய்தியை நம் மத்திய அரசு படிக்கும் போது நமக்காவது 11 வருட சரிவு தான், ஆனால் சீனாவுக்கோ 29 ஆண்டில் இல்லாத சரிவு என கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான். மற்ற படி இரண்டு பேருக்கும் அடி பலமாக விழுந்து கொண்டு இருக்கிறது. என்னத்தையாவது உருப்படியாக செய்து பொருளாதாரம் மேம்பட்டால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s GDP is in 29 years low

China is also facing a crucial time in economic growth. China's Economic growth is in its 29 years low. It posted 6.0 percent GDP growth for the year 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X